ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகள்

வடிவவியலில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கோடுகள் ஒரே புள்ளியில் சந்தித்தால் அவை ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகள் (concurrent lines) எனப்படும்.

ஒரு முக்கோணத்தில் குத்துக்கோடுகள், கோண இருசமவெட்டிகள், நடுக்கோடுகள், நடுக்குத்துக்கோடுகள் எனநான்கு வகையான ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகள் உள்ளன

குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளி -செங்குத்து மையம்.

கோண இரு சமவெட்டிகள் சந்திக்கும் புள்ளி -உள்வட்ட மையம்.

நடுக்கோடுகள் சந்திக்கும் புள்ளி -நடுக்கோட்டுச்சந்தி.

நடுக்குத்துக் கோடுகள் சந்திக்கும் புள்ளி -சுற்றுவட்ட மையம்.

முக்கோணத்துடன் தொடர்புள்ள மற்ற ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு முக்கோணத்தின் ஏதேனும் ஒரு நடுக்கோடு, (நடுக்கோடு முக்கோணத்தின் பரப்பை இருசமக் கூறிடும்) முக்கோணத்தின் பக்கங்களுக்கு இணையாகவும் முக்கோணத்தின் பரப்பை இருசமக்கூறிடுவையுமான இருகோடுகளுடன் ஒரே புள்ளியில் சந்திக்கும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Dunn, J. A., and Pretty, J. E., "Halving a triangle," Mathematical Gazette 56, May 1972, 105-108.

வெளி இணைப்புகள் தொகு