ஒற்றைப் பதிவு முறை
ஒற்றைப் பதிவு கணக்கியல் முறை அல்லது ஒற்றைப் பதிவு முறை (Single Entry System or Single Entry bookkeeping) என்பது நிதித் தகவல்களைப் பராமரிக்கப் பயன்படுத்தப் பெறும் கணக்கியல் முறையாகும். இது பரிவர்த்தனையைப் பதிவு செய்வதற்கான முழுமையற்ற முறை என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான வணிகங்கள் இரட்டைப் பதிவுமுறையைப் பயன்படுத்தி அனைத்து பரிவர்த்தனைகளின் பதிவையும் பராமரிக்கின்றன.
ஆனால் பல சிறு வணிகங்கள் "அத்தியாவசியங்களை" பதிவு செய்யும் ஒற்றைப் பதிவுப் புத்தகத்தை மட்டுமே வைத்திருக்கின்றன. சில சிறு வணிக நிறுவனங்களில் பணம், வரவுக் கணக்குகள், பற்றுக் கணக்குகள், மற்றும் செலுத்தப்பட்ட வரிகளின் பதிவுகள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன.
நன்மைகள்:
தொகுஒற்றைப் பதிவு கணக்கியல் முறை மிகவும் எளிமையானது. இரட்டைப் பதிவுமுறையில் பயிற்சி பெற்ற நபரின் உதவியின்றி பெரும்பாலும் பரிவர்த்தனைகளை உள்ளிட முடியாது.
உள்நாட்டு வருவாய் முகமைப் படி, ஒற்றைப் பதிவு கணக்கு என்பது வருமான அறிக்கையை ( இலாப நட்ட அறிக்கை ) அடிப்படையாகக் கொண்டது. ஒரு சிறு தொழிலைத் தொடங்குபவர்களுக்கு இது எளிய மற்றும் நடைமுறைக்குரியதாக இருக்கும். [1]
கூடுதலாக உள்நாட்டு வருவாய் முகமை கூறுவதாவது:
1. ஒற்றைப் பதிவு முறையில், கணக்குகளுக்குச் சமமான பற்று மற்றும் வரவு இருப்புநிலைக் குறிப்புகளிலும் வருவாய் அறிக்கையிலும் இருக்காது. இது ஒரு போதும் தானே சரிக்கட்டிக் கொள்ளாது. எண்கணிதப் பிழை கணக்குகளைக் கூட்டும்போது வரக்கூடும்.
2. ஒற்றைப் பதிவு முறை ஒரு குறிப்பேடு, நாளேடு அல்லது சிற்றெடுகளில் இருக்கும் பரிவர்த்தனைகளை மட்டுமே கொண்டிருக்கக்கூடும்.
குறைகள்:
தொகு1. வணிகத்தைத் திறம்படத் திட்டமிடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தரவுகள் நிர்வாகத்திற்குக் கிடைக்காமல் போகலாம்.
2. முறையான மற்றும் துல்லியமான புத்தக பராமரிப்பு இல்லாதது நிர்வாகத்தின் இழப்பிற்கு வழிவகுக்கும். அது வணிகத்தின் செயல்பாடுகளில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டைக் கூட குறைக்கும்.
3. திருட்டு மற்றும் பிற இழப்புகள் ஏற்ப்பட்டால் கணக்குகளில் கண்டறியப்படுவது குறைவு.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Single-entry bookkeeping - Wikipedia". en.m.wikipedia.org. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.