ஒற்றைப் புகுபதிகை
ஒற்றைப் புகுபதிகை (Single sign-on - SSO) என்பது கணனியில் இயங்கும் பல்வேறு செயலிகளை (programs) கணனியில் ஒருமுறை புகுபதிகை செய்வதன் முலம் பயன்படுத்தும் ஓர் முறையாகும். இதன் மூலம் ஒரு பயனர் ஒவ்வொரு முறையும் தனது கணனியில் உள்ள செயலிகளை லாக்-ஆன் செய்வது தவிர்க்கப்படுகின்றது. இம்முறையில் ஒரு பயனர் தனது கணனியை விடுபதிகை செய்வதன் முலம் அனைத்து செயலிகளையும் விடுபதிகை செய்யமுடியும். இம்முறையில் பயனரின் நேரம் மிச்சப்படுவதுடன் வெவ்வேறு செயலிகளுக்கு பலதரப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு பயனர் தனது கணனியில் புகுபதிகை செய்வதன் மூலம் மின் அஞ்சல் செயலியை புகுபதிகை செய்யாமலேயே பயன் படுத்தமுடியும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "What's the Difference b/w SSO (Single Sign On) & LDAP?". JumpCloud (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-05-14. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.
- ↑ "SSO and LDAP Authentication". Authenticationworld.com. Archived from the original on 2014-05-23. பார்க்கப்பட்ட நாள் 2014-05-23.
- ↑ "OpenID versus Single-Sign-On Server". alleged.org.uk. 2007-08-13. பார்க்கப்பட்ட நாள் 2014-05-23.