ஒற்றையா இரட்டையா

ஒற்றையா இரட்டையா (வழக்கு: ஒத்தையா ரெட்டையா, ஒத்தையா ரட்டையா) என்பது ஓர் ஊழ்த்திற விளையாட்டு.

விவரம்

தொகு

இதனை இருவர் ஆடுவர். ஒவ்வொருவருக்கும் 100 புளியங்கொட்டைகள். அவற்றை முத்து என்பர்.

ஒருவர் தன் கையில் தன்னிடமுள்ள புளியங்கொட்டைகளை அள்ளிக் கையில் மூடிக்கொண்டு கையில் உள்ளது ஒற்றையா, இரட்டையா என்று கேட்பார். எதிரில் உள்ளவர் சரியாகச் சொல்லிவிட்டால் அத்தனையும் சொன்னவருக்கு. தப்பாகச் சொன்னால் கையில் உள்ள அத்தனை எண்ணிக்கை உள்ள கொட்டைகளைச் சொன்னவர் காட்டியவருக்குத் தரவேண்டும்.

வெறுங்கை காட்டுதலைப் பரட்டை என்பர். இதற்கு ‘பரட்டைக்குப் பத்து முத்து’ என்று பரிமாற்றம் நிகழும். யாராவது ஒருவர் ஒன்றுமில்லாதவர் ஆகும்வரை ஆட்டம் தொடரும்.

மேலும் காண்க

தொகு

கருவிநூல்

தொகு
  1. பாலசுப்பிரமணியம், இரா, தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980
  2. கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல், 627 716, 1982
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றையா_இரட்டையா&oldid=1003555" இலிருந்து மீள்விக்கப்பட்டது