ஒற்றை ஓநாய் தாக்குதல்
தனிநபராக இருந்து நடத்தும் பயங்கரவாத தாக்குதல்
ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது பயங்கரவாத சிந்தனை கொண்ட தனிமனிதரால் மேற்கொள்ளும் ஒரு பயங்கரவாத தாக்குதல் ஆகும். ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக சித்தாந்தத்திற்காக தாக்குதல் நடத்தப்படும். பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி நூற்றுக்கணக்கான மனித உயிர்களை கொல்லுதல், தற்கொலை குண்டு தாக்குதல்களும் அடங்கும். இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல்கள் இசுலாமிய அரசு, அல் காயிதா போன்ற பயஙகரவாத அமைப்புகளின் சித்தாந்தத்தில் உருவானவை. இது போன்ற தாக்குதல்கள் உலகில் பலமுறை நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தகைய தாக்குதல்கள் மூலம் பொதுமக்களிடத்தில் பயத்தை தூண்டவும் மற்றும் மக்கள் சிந்திக்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.[1]
ஒற்றை ஓநாய் தாக்குதல்கள்
தொகுஒற்றை ஓநாய் தாக்குதல்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்:
- 13 நவம்பர் 2015 அன்று வெள்ளிக்கிழமை அன்று பிரான்சு நாட்டில் இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் நடத்திய 2015 பாரீஸ் நகரத் தாக்குதல்கள்[2]
- 2019 இலங்கை ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகள்
- கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள், 2019