ஒலிப்பொருத்த நுட்பம்

ஒரு பொருளைக் குறிக்கும் குறியீட்டை, அதே ஒலியைக் கொண்ட வேறு ஒரு பொருளுக்குப் பயன்படுத்துவது ஒலிப்பொருத்த நுட்பம் எனப்படும். ஆங்கிலத்தில், இதனை "ரீபசு" (rebus) நுட்பம் என்கிறார்கள்.

பயன்பாடு

தொகு

சிந்துவெளி ஆராய்ச்சியில்

தொகு

இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, அறிஞர்கள் சிந்துவெளிக் குறியீடுகள் திராவிட மொழியை எழுதப் பயன்படுத்தப் பெற்றன என்று நிறுவுகின்றனர்.

 
பிறை நிலவைக் குறிக்கும் குறியீடு

எடுத்துக்காட்டாக, "பிறை" நிலவைக் குறிக்கும் குறியீட்டை, "பிற" (மற்ற) என்ற பொருள் தரவும் பயன்படுத்துவது ஒலிப்பொருத்த நுட்பமாகும் [1].

ஒலிப்பொருத்த மாற்ற நுட்பத்தின் (rebus technique) அடிப்படையில், 'பிற' என்ற ஒலியைக் குறிக்கும் பிறை நிலவுக் குறியீடு, அதனோடு தொடர்புடைய 'புறம்' என்பதைக் குறித்து, புறநகரில் (சுவர்களுக்குள்) வசிப்பவர்களின் முகவரியையும் குறித்திருக்கலாம் என்று அறிஞர்கள் நம்புகின்றனர். சொற்பிறப்பியல் அடிப்படையில், 'கோட்டைக்கு வெளியே உள்ள பிற மக்கள்' வாழும் இடம் “புறம்” என்றழைக்கப் பெற்றது (புறம் - வெளியில், வெளிப்புறம் என்று பொருள்) எனவும், இவ்விடமும் அதே பிறை நிலவுக் குறியீட்டால் குறிக்கப்பட்டிருக்கலாம் எனவும் நிறுவலாம்.

விளையாட்டுப் புதிர்களில்

தொகு

ஒலிப் பொருத்த நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிர்கள் அமைத்தல் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. இப்புதிர்களை வைத்துப் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடத்தப் பெறுகின்றன.

[[பகுப்பு:குறியீடுகள்]]

  1. "Akam and Puram of the Indus Script". Keezhadi and the Indus Valley Civilization (in ஆங்கிலம்). 2019-11-19. பார்க்கப்பட்ட நாள் 2024-07-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிப்பொருத்த_நுட்பம்&oldid=4051977" இலிருந்து மீள்விக்கப்பட்டது