ஒலிவியா (OliviaT) ஓர் நடனக் கலைஞரும், இசைக் கலைஞரும் பாடகரும் ஆவார். இளவயதில் இலங்கையில் இருந்து ஜெர்மனிக்கு சென்றாலும் தன் பண்பாட்டை மறவாது கடைபிடித்தனர் ஒலிவியா குடும்பத்தினர். வீட்டில் தமிழ் பேசியும், தமிழ்ப் பண்பாட்டைப் பேணியும் வளர்ந்தார். ஐந்து வயதில் பரதநாட்டியம் கற்றார். பின்னர் இலண்டன் சென்று நடன ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பெற்றார். லண்டனின் கீழ்த்திசை கலை அகாதெமியில் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தி, நாட்டிய கலாஜோதி என்னும் பட்டம் பெற்றார். ஜெர்மனி கலை பண்பாட்டுக் கழகத்தால் ஆடற்கலை அரசி என்னும் சிறப்புப் பட்டம் பெற்றார். ஜெர்மனியின் கானம்பாடி என்னும் நிகழ்ச்சியில் பாடி ஜெர்மன் இன்னிசைக் குரல் என்னும் பட்டம் பெற்றார். இவர் நடனத்துடன் பாடல்களையும் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர், மலேசியத் தமிழ் ஊடகங்கள் இவரைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன.
Ananthi Magazine.