ஒளிக்கூண்டு மீன்
ஒளிக்கூண்டு மீன் எலும்பு மீன்கள் வகுப்பை சேர்ந்தது. ஆழமான கடல் பகுதிகளில் காணப்படும். ஆக்டினோட்டரிஜயத் துணைவகுப்பைச் சேர்ந்தது.
தன்மைகள்
தொகுபழுப்பு, சாம்பல் நிறங்களில் காணப்படுகிறது. 2.5 செ.மீ. நீளம் உடையது. கண்கள் பெரியது. ஒளி உறுப்புகள் பெற்றிருப்பதால் ஒளிக்கூண்டு மீன்கள் அல்லது விளக்கு மீன்கள் என்னும் பெயர் பெறுகிறது.
உடலமைப்பு
தொகுஉடலின் இருபுறங்களிலும் ஒளி உறுப்புகள் புலப்படும்படியாக அமைந்துள்ளன. பிற இனங்களில் இருந்து தான் தன் இனத்தை கண்டுகொள்ள முடியும். ஆண் மீன் வால் மேல் பகுதியிலும் பெண் மீன் கீழ்ப்பகுதியிலும் ஒளிபட்டையைப் பெற்றுள்ளன. ஆண் மீன் எதிரிகளை அச்சுறுத்த ஒளி உறுப்புகளை பயன்படுத்துகின்றது. மிதவை உயிரினங்களை எளிதாகக் உட்கொள்கிறது
வாழ்விடம்
தொகுஆழ்கடலில் வாழ்கின்றன. கடல் மேல்பரப்பிற்கு செங்குத்தாக இயங்குகின்றது.
மீன் குஞ்சுகள்
தொகுகுளிர் காலம் தொடங்கி கோடைகாலம் வரை பெண் மீன் 200 முதல் 4000 முட்டைகள் வரை இடுகிறது. கடல் மேற்பரப்பில் வாழும். வளர்ச்சியடைந்த பின்னர் ஆழப் பகுதிக்கு செல்லும். மீன்களில் இருந்து வரும் ஒளி நீளம், பச்சை மஞ்சள் வண்ணம்[1]பெற்றிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ அறிவியல் களஞ்யம்-தொகுதி 6
மேலும் படிக்க
தொகு- Kupriyanova, E.K.; Vinn, O.; Taylor, P.D.; Schopf, J.W.; Kudryavtsev, A.B.; Bailey-Brock, J. (2014). "Serpulids living deep: calcareous tubeworms beyond the abyss". Deep-Sea Research Part I 90: 91–104. doi:10.1016/j.dsr.2014.04.006. Bibcode: 2014DSRI...90...91K.