ஒளிசார் வானியல்
ஒளிசார் வானியல் கண்ணுக்குப் புலப்படுகின்றவையும் (அண்ணளவாக 400 - 800 nm)அவற்றுக்குச் சற்று வெளியே உள்ளவையுமான அலைநீளங்களுடன் கூடிய ஒளியைக் கண்டறியவும், பகுப்பாய்வு செய்யவும் பயன்படும் நுட்பங்களோடு தொடர்பானது. இது மிகவும் பழமை வாய்ந்த வானியல் முறைமை ஆகும்.[1] மின்னணுப் படமாக்கிகள், நிறமாலை வரைவிகள் போன்றவற்றுடன் கூடிய தொலைநோக்கியே இதற்குப் பயன்படும் பொதுவான கருவிகள் ஆகும்.
மிகப் பழைய வானியல் முறை இதுவே. முற்காலத்தில், கண்ணால் பார்ப்பவற்றைக் கையால் வரைந்து பதிவு செய்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலம் முழுவதும் விம்பங்களைப் பதிவு செய்வதற்கு ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்தினர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Moore, P. (1997). Philip's Atlas of the Universe. Great Britain: George Philis Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-540-07465-9.