ஒளிப்பதிவாளர்

திரைப்பட ஒளிப்பதிவாளர் அல்லது ஒளிப்பதிவாளர் (Cinematographer) என்பவர் ஒரு திரைப்படம் இயக்குநரால் உருவாக்கப்படுவதை ஒளிப்படமாக அதாவது காணொளியாகப் பதிவு செய்பவர் மற்றும் திரைப்பட வடிவ நேர்த்தியினை, துல்லியத்தை, அழகினை வெளிக்காட்டுபவர் எனலாம்.

ஒளிப்பதிவு செய்யும் காட்சி

ஓர் ஓளிப்பதிவாளர் திரைக்களத்தை மன ஓவியமாகத் தீட்டி, திரைப்படத்தின் கலை மற்றும் நாடகத்தன்மையின் அங்கங்களைக் கட்டுப்படுத்தி தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு தன் புதுப் புது சிந்தனை ஆற்றலைக் கொண்டு திரைப்படக் காட்சிகளை வடிவமைக்கும் கலைஞராவார். முழு நேரங்களில் திரைப்பட ஒளிப்பதிவாளரின் சுதந்திரம் இருக்காது எனினும், திரைப்பட இயக்குநர் அல்லது தயாரிப்பாளரினால் தேர்வு செய்யப்பெற்ற களத்தை ரசிக்கும்படி படைக்கும் திறன் முற்றும் ஒளிப்பதிவாளரின் திறன் பால் மட்டுமே உள்ளது. பல நிறுவனங்கள் ஒளிப்பதிவாளர்க்கென சான்றிதழுடன் பயிற்சியளித்து வருவதைக் காணலாம். அமெரிக்கா நாடு 100 வது ஒளிப்பதிவாளர்கள் தினத்தை 2020 ஆம் ஆண்டு கொண்டாடியது.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிப்பதிவாளர்&oldid=3094439" இலிருந்து மீள்விக்கப்பட்டது