ஒளிவேதியியல் எதிரொளிப்பு எண்
ஒளிவேதியியல் எதிரொளிப்பு எண் (photochemical reflectance index) என்பது ஒர் எதிரொளிர்வு அளவீடு ஆகும்.ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கார்னிகி அறிவியல் துறையில் கிறிஸ்டோபர் ஃபீலடுட் என்பவாின் மேற்பார்வையில் முனைவா் பட்டம் பெறுவதற்கான பயிற்சியில் இருந்த ஜான் கமோன் என்பவரால் இது உருவாக்கப்பட்டது. இது இலை தொகுதிகளில் உள்ள கரோட்டினாய்டு நிறமிகளில் (எ.கா.புதல் மஞ்கள் நிறமிகள்) ஏற்படும் மாற்றங்களை உணரக் கூடியது. இது கரோடினாய்ட் நிறமிகள் ஒளிச்சேர்க்கையில் ஒளியின் செயல்திறன் விகிதத்தினை, அதாவது இலை தொகுதிகள் ஒரு அலகு பரப்பில் உறிஞ்சிய கார்பன் டை ஆக்சைடு விகிதத்தை குறிக்கின்றது.இதனால், தாவர உற்பத்தி மற்றும் குறைபாடு பற்றிய ஆய்வுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இது தாவரங்களில் ஏற்படும் குறைபாடுகளை அளவிடுவதால் இது செயற்கைக்கோள் தரவுகள் அல்லது பிற தொலைநிலை உணர்விகளிலும் பயன்படுகிறது. தாவர நலவாழ்வை மேம்படுத்த பசுமையான புல்வெளிகளிலும், காடுகளிலும்,வேளாண்மைப் பயிர்களிலும் பயன்படுத்தப்படுகிறது . 531 மற்றும் 570 nm அலைநீளத்தில் எதிரொளிர்வு (ρ) மதிப்பைப் பயன்படுத்தி, ஒளிவேதியியல் எதிரொளிப்பு எண்(PRI) என்பது பின்வரும் சமன்பாடுகளால் வரையறுக்கப்படுகிறது:
சில ஆசிாியா்கள் இவ்வாறும் பயன்படுத்துவா்.
ஒளிவேதியியல் எதிரொளிப்பு எண் மதிப்பானது –1 முதல் 1 வரை இருக்கும்.
ஆதாரங்கள்
தொகு- ENVI Users Guide
- John Gamon, Josep Penuelas, and Christopher Field (1992). A narrow-waveband spectral index that tracks diurnal changes in photosynthetic efficiency. Remote Sensing of environment, 41, 35-44.
- Drolet, G.G. Heummrich, K.F. Hall, F.G., Middleton, E.M., Black, T.A., Barr, A.G. and Margolis, H.A. (2005). A MODIS-derived photochemical reflectance index to detect inter-annual variations in the photosynthetic light-use efficiency of a boreal deciduous forest. Remote Sensing of environment, 98, 212-224.