ஒளி அயனியாக்கம்

ஒளிஅயனியாக்கம் (Photoionization) என்பது ஒரு ஒளியணு மற்றொரு அணு அல்லது மூலக்கூறுடன் தொடர்பு கொள்ளும் போது (ஒன்று ஏற்றம் ஒன்றைப் பெறுவதன் மூலம் அல்லது இழப்பதன் மூலம்), அயனி உருவாக்கப்படும் இயற்பியல் செயற்பாடு ஆகும்.பொதுவாக இந்த நிகழ்வின் போது அதிக பிரகாசமான ஒளி உருவாகிறது.

ஒளிஅயனியாக்க பண்புகள்

தொகு

ஒவ்வொரு ஒளியணு, அணுவை தொடர்பு கொள்ளும் போதும் ஒளிஅயனியாக்கம் நடைபெறுவது இல்லை. ஒளிஅயனியாக்கத்தின் வாய்ப்பு அந்த அந்த ஒளியணுவின் ஒளிஅயனியாக்க பண்புகளைப் பொறுத்தது, அதாவது ஒளியணுவின் ஆற்றல் மற்றும் தொடர்பு கொள்ளும் அணுவின் ஆற்றலைப் பொறுத்தது. ஒளியணுவின் ஆற்றல் அயனியாக்கத்தின் தேவையான ஆற்றலை விட குறைவாக ஆற்றலை கொண்டிருந்தால் அதன் ஒளிஅயனியாக்க பண்புகள் பூஜ்யம் ஆகும்.

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_அயனியாக்கம்&oldid=2746903" இலிருந்து மீள்விக்கப்பட்டது