ஒ.ச.நே + 05:40
ஒ.ச.நே + 05:40 (UTC+05:40) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +05:40 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.[1]
இது சில சமயங்களில் 1986ஆம் ஆண்டு வரை நேபாளத்தின் சீர் நேரமாக பயன்படுத்தப்பட்ட, காட்மாண்டூவின் இடைநிலை நேரமான ஒ.ச.நே + 05:41:16 ஐ (85°19'கிழக்கு நிலநிரைக்கோட்டின்படி) குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[2]
1986ஆம் ஆண்டு முதல் (பிக்ராம் ஆண்டு - 2043), நேபாள சீர் நேரமாக ஒ.ச.நே + 05:45 பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Asia at the IANA time zone database. Internet Assigned Numbers Authority (IANA). Retrieved 9 May 2021.
- ↑ EVI Facts