ஓசன்கேட்
ஓசன்கேட் நிறுவனம் (OceanGate), ஐக்கிய அமெரிக்காவின் தனியார் ஆழ்கடல் சுற்றுலா நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் வாஷிங்டன் மாகாணத்தின் எவரெட் நகரத்தில் உள்ளது. இதனை 2009ம் ஆண்டில் நிறுவியவர்கள் ஸ்டோக்டன் ரஷ் மற்றும் குயில்லேர்மோ சோன்லீன் ஆவர்.[2][3]
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
தொழில்துறை | சுற்றுலா, பயணங்கள், கடலடிப் பயணம் |
பணியாளர் | 47 (2023)[1] |
2012ல் முதல் பயணித்திலே வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி, கடலடியில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை காண்பதற்கு, சுற்றுலா நோக்கத்திற்காக 6 பேர் பயணிக்கும் அளவிற்கு இரண்டு சிறிய நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கினர். 2022ம் ஆண்டில் இப்பயணததிற்கு கட்டணமாக ஒரு நபருக்கு $ 2,50,000 அமெரிக்க டாலர்கள் வசூலித்தனர்.[4]
சூன், 2023ல் டைட்டானிக் கப்பலின் பாகங்களை காண்பதற்கு சென்ற டைட்டான் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியது. அதில் பயணித்த நீர்மூழ்கிக் கப்பலின் இணை நிறுவனர் ஸ்டோக்டன் ரஷ் உள்ளிட்ட 5 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்.[5]இறந்தவர்களில் உடலையும், நீர் மூழ்கிக் கப்பலையும் மீட்பதற்கு தேடவும், மீட்கவும் பன்னாட்டு தேடுதல் வேட்டை துவக்கப்பட்டுள்ளது.[6]22 சூன் 2023 அன்று கடலுடிக்கடியில் உடைந்த டைட்டானிக் கப்பலின் பாகங்கள் அருகே நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kay, Grace; Nolan, Beatrice (22 June 2023). "A cafe owner who served OceanGate workers and its CEO Stockton Rush says locals are 'disheartened' that the sub become an internet meme". Insider.
- ↑ "Cyclops Submersible Brings Deep-Water Exploration to the 21st Century" (in en). NBC News. https://www.nbcnews.com/science/science-news/cyclops-submersible-brings-deep-water-exploration-21st-century-n321726.
- ↑ Ghosh, Shona. "OceanGate cofounder: Titanic sub passengers can survive past the time their oxygen is meant to run out". Insider. https://www.insider.com/oceangate-cofounder-passengers-can-survive-after-oxygen-cut-off-time-2023-6.
- ↑ Waterman, Andrew (November 17, 2021). "'Citizen scientists' pay $250K to work Titanic expedition at depths of 12,500 feet in the North Atlantic Ocean". SaltWire. https://www.saltwire.com/atlantic-canada/lifestyles/citizen-scientists-pay-250k-to-work-titanic-expedition-at-depths-of-12500-feet-in-the-north-atlantic-ocean-100659359/.
- ↑ Shpigel, Ben; Victor, Daniel (2023-06-22). "Missing Titanic Submersible: All Five on Board Believed Dead After 'Catastrophic Implosion'" (in en-US). The New York Times. https://www.nytimes.com/live/2023/06/22/us/titanic-missing-submarine.
- ↑ "What to know about the 5 passengers on the missing Titanic sub" (in en-US). CBS News. June 20, 2023. https://www.cbsnews.com/news/who-is-on-missing-titanic-submarine-passengers-hamish-harding-shahzada-dawood/.