ஓடாதே! (புதினம்)
ஓடாதே!, சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஓடாதே! | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம் [1] [2] விசா பப்ளிகேஷன்ஸ்[3] |
வெளியிடப்பட்ட நாள் | 2010 |
ISBN | 978-81-8493-275-1 |
கதைக் கரு
தொகுசென்னையில் இருந்து பெங்களுருக்கு திருமணமாகித் தேனிலவு செல்லும் தம்பதிகள் ஆனந்த், மீரா. இதில் ஆனந்தை காரணம் சொல்லாமல் போலீஸ் விரட்டுகிறது. ஏன் துரத்துகிறார்கள் என்று தெரியாமல் கிடைத்த வழியெல்லாம் ஓடி பயணம் செய்கிறார்கள். ஆனந்தின் மாமாவின் நண்பரிடம் தஞ்சம் புகுகிறார்கள். போலீஸ் துரத்துவதையும் நிறுத்திவிடுகிறது. அவர்களின் ஓட்டமும் நிற்கிறது. ஆனந்தும் மீராவும் சென்னை திரும்புகிறார்கள் ஆனந்தை எதற்காகத் துரத்தினார்கள் என்ற மர்மத்தை வக்கீல் கணேஷும், வசந்தும் கண்டறியும் கதை.
கதை மாந்தர்கள்
தொகு- கணேஷ்
- வசந்த்
- ஆனந்த்
- மீரா
- ராஜூ
- தனபால்
- ராஜசேகர்
- சோமப்பா மற்றும் பலர்.