ஓடுகுஞ்சு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஓடுகுஞ்சு என்பது தமிழக நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு. நிலாவெளிச்சத்தில் சிறுவர் சிறுமியர் இதனை விளையாடுவர். 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இது படிப்படியாக மறைந்துவருகிறது.
ஆட்டம்
தொகு- இரண்டு அணிகள்
- ஒன்று ஓடும்-அணி
- மற்றொன்று தொடும்-அணி
- ஓடும் அணியில் ஒருவரைக் குஞ்சு என அந்த அணியினர் கூடி வைத்துக்கொள்வர். இது எதிர் அணியினருக்குத் தெரியாது.
- இரு அணியினரும் சுமார் 10 அடி இடைவெளியால் வரிசையாக நிற்பர்.
- இரு அணியினரும் சேர்ந்து ஒருவகை ஒலி எழுப்புவர்.
- ஓடும் அணியினர் உத்திக்கோட்டைத் தொட ஓடுவர்.
- தொடும் அணியினர் குஞ்சைப் பிடிக்கவேண்டும்.
- பிடித்துவிட்டால் தாங்கள் ஓடுகுஞ்சு வைத்துக்கொண்டு ஓடலாம்.
- பிடிக்காவிட்டால் முன் ஓடியது போலவே மீண்டும் ஓடவேண்டும்.
- ஓடுகுஞ்சாக அதிக முறை இருந்த அணி வெற்றி-அணி
உட்பொருள்
தொகுவிலங்குகள் தம் குட்டிகளைப் புலி முதலான எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொண்டு சூழ்ந்து செல்லும். அதுபோல ஓடுகுஞ்சு அணியினர் குஞ்சு தப்பி ஓடும்படி பாதுகாத்துக்கொண்டு ஓடுவர்.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980