ஓடுசிக்கு
ஓடுசிக்கு ஒரு மூச்சுப்பயிற்சி விளையாட்டு. சிறுவர்கள் இதனை விளையாடுவர். தமிழ்நாட்டில் விளையாடப்பட்ட இந்த விளையாட்டு 1950-க்குப் பின்னர் படிப்படியாக மறையலாயிற்று.
ஆட்ட விவரம்
தொகுஇரண்டு அணிகள் கொண்டு கபடி அட்டம் போல் விளையாடப்படும். கபடி ஆட்டத்தில் பாடி வருவோரைப் பிடிக்கலாம். இந்த விளையாட்டில் பிடிக்கக்கூடாது - இது வேறுபாடு. பாடி ஒரு கையால் மூக்கைப் பிடித்துக்கொண்டு மூச்சு விடாமல் பாட்டுப் பாடிக்கொண்டே வந்து எதிரணியினரைத் தொடவேண்டும்.
பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980