ஓடைப்பட்டி கிராமம்
(ஓடைப்பட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஓடைப்பட்டி (Odaipatty) இந்தியா-தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தின் முக்கிய வேலையாக பெரும்பாலும் காய்கறிகளான: தக்காளி, முருங்கை, கத்தரி, வெண்டைக்காய், சிவப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சாகுபடி/வேளாண்மை செய்யப்படுகிறது. காய்கறிகள் விற்பனை செய்யப்படும் இடமான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை, தமிழ்நாட்டின் பிரபலமான சந்தையாகும் மற்றும் கேரள மாநிலத்திற்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது.
மக்கட்தொகைப் பரவல்
தொகு2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இஙு 13,892 மக்கள் உள்ளனர். ஆண்கள் 49.8% பெண்கள் 50.2 % பேர் உள்ளனர். கல்வியறிவு வீதம் 69.8% ஆகும். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Office of the Registrar General & Census Commissioner, India 2011 Census Data". Census of India Website : Office of the Registrar General. Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2019-06-18.