ஓட்டமாவடி தேசிய பாடசாலை

இலங்கையின் கிழக்கு மாகாணம், மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தேர்தல் தொகுதியின் ஓட்டமாவடி பிரதேசத்தில் 1917 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்/ஓட்டமாவடி தேசிய பாடசாலை எதிர்வரும் 2017ம் ஆண்டு நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளது.



பாடசாலைக் கீதம்

தொகு

அருளன்பு பண்பினில் இறைவா!
உன்னை மிகைப்பவர் யாருண்டு
எம்மையும் உன்னருங் கருணையினால் - II
நீ உயர்த்திட வேண்டும் - எம்
இறையவனே! இறையவனே!

ஓட்டமாவடி நகர் வாழும் - எங்கள்
கலையகம் கல்வியில் சிறந்திடவே
கூட்டுறவாகவே உனை வேண்டி -II
எம் கரங்களை உயர்த்தினோம்
அருள் புரிவாய்! அருள் புரிவாய்!

வர்த்தகம், கலை இசை, விஞ்ஞானம்
நல்ல சித்திரம் புவியியல் வளர் கணிதம்
தமிழோடு சிங்களம், அறபு நெறி -II
உயர் ஆங்கிலம் இவைதனில்
சிறந்திடவே! சிறந்திடவே!

இரு மொழி பல இனம் வாழ் ஈழம்
இங்கு ஓரன்னை பெற்றிட்ட சேய்களென
ஒற்றுமையுடன் பலம் பொருந்திடவே - உன்
அருளினை வேண்டினோம் இறையவனே!

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டமாவடி_தேசிய_பாடசாலை&oldid=4164018" இலிருந்து மீள்விக்கப்பட்டது