ஓட்டை விழுந்த ஏரி
ஓட்டை விழுந்த ஏரி (Spotted Lake) என்பது கனடாவில் உள்ள பிரித்தானிய கொலம்பியாவின் சிமில்காமீன் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் ஓசோயயூசு நகரின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள மூடிய வடிநிலப்பகுதியமை உவர்தன்மை மற்றும் காரத்தன்மை கொண்ட ஏரியாகும்.[1]
கனிமம் மற்றும் உப்புச்செறிவு
தொகுஇந்த ஏரியானது பல்வேறு கனிமங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த ஏரியில் மக்னீசியம் சல்பேட்டு, கால்சியம் மற்றும் சோடியம் சல்பேட்டு ஆகியவற்றின் அடர் படிவுகள் காணப்படுகின்றன. இந்த ஏரியானது இன்னும் எட்டு இதர கனிமங்களையும் சிறிய அளவிலான வெள்ளி மற்றும் தைட்டானியம் போன்ற உலோகங்களையும் கொண்டுள்ளது. ஏரியில் உள்ள பெரும்பாலான நீர் கோடையில் ஆவியாகி, வண்ணமயமான கனிம படிவுகளை வெளிப்படுத்துகிறது. ஏரியின் மீது பெரிய 'புள்ளிகள்' கனிமங்களின் இயைபு மற்றும் பருவகால மழைப்பொழிவு அளவு ஆகியவற்றின் மாற்றங்களுக்கேற்ப தோன்றும். கோடையில் படிகமாகும் மக்னீசியம் சல்பேட்டானது, நிறத்தை மாற்றுவதில் முக்கிய பங்களிக்கிறது. கோடையில், ஏரியில் மீதமுள்ள கனிமங்கள் கடினமடைந்து புள்ளிகளைச் சுற்றியும் இடையிலும் இயற்கையான "நடைபாதைகளை" உருவாக்குகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Okanagan Geology South. Okanagan Geology Committee. 2011. pp. 78–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9699795-3-1.