ஓனோபைட்டா
பண்டைய கிரேக்க நகரம்
ஓனோபைட்டா (Oenophyta அல்லது Oinophyta ( பண்டைக் கிரேக்கம்: τὰ Οἰνόφυτα ) என்பது பண்டைய போயோட்டியாவில் இருந்த நகரம் ஆகும். முதல் பெலோபொன்னேசியப் போரின் போது, கி.மு. 457 இல் இங்கு நடந்த ஓனோபிட்டா போரில் மிரோனைட்சின் கீழ் ஏதெனியர்கள் போயோட்டியன் கூட்டணியின் மீது குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியை ஈட்டினர். இந்த வெற்றியைத் தொடர்ந்து தனக்ரா அழிக்கப்பட்டது. இதனால், இது அட்டிகாவின் எல்லையிலிருந்து வெகு தொலைவில் இல்லாத பிந்தைய நகரப் பகுதியில் இருந்தது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.[1] மேலும் இதன் பெயரானது முக்கியமாக மது உற்பத்தி செய்யப்பட்ட இடம் என்பதைக் காட்டுகிறது, அதற்காக தனக்ரா பிரதேசம் கொண்டாடப்பட்டது.
இதன் தளம் நவீன ஒய்னோஃபைட்டா (ஸ்டானியேட்ஸ்) அருகே அமைந்துள்ளது.[2][3]