ஓபராய் உதய்விலாசு

இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள உதய்ப்பூர் நகரில் அமைந்துள்ள ஓர் உல்லாசத் தங்குமிடம்

ஓபராய் உதய்விலாசு (Oberoi Udaivilas) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள உதய்ப்பூர் நகரில் அமைந்துள்ள ஓர் உல்லாசத் தங்குமிடமாகும். அமெரிக்காவின் நியூயார்க்கு நகரிலிருந்து வெளிவரும் பயணம்+ஓய்வு (Travel + Leisure.) என்ற பயணப் பத்திரிகை 2015 ஆம் ஆண்டு இந்த தங்கும் விடுதியை உலகின் சிறந்த தங்குமிடமாக மதிப்பிட்டது. [1]

ஓபராய் உதய்விலாசின் நீச்சல்குளம்

சுமார் 200 ஆண்டுகள் பழமையான மேவார் மகாராணாவின் வேட்டை மைதானத்தில் இந்த தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவில் சுமார் 40 சதவீதம் வனவிலங்கு சரணாலயமாக நியமிக்கப்பட்டுள்ளது. [2]

ஓபராய் உதய்விலாசில் ஒரு கோகினூர் தங்கும் அறை, 4 சொகுசு அறைகள் உட்பட மொத்தம் 87 அறைகள் உள்ளன. ஆடம்பரமான இலக்கு கொண்ட திருமணங்கள் நடத்துவதற்கு ஒரு பிரபலமான இடமாக ஓபராய் உதய்விலாசு கருதப்படுகிறது. 2 நாள் திருமண விழாவிற்கு முழு தங்கும் விடுதியையும் முன்பதிவு செய்ய சுமார் 3.5 கோடி இந்திய ரூபாய் செலவாகிறது எனக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "The Oberoi Udaivilas, Udaipur ranked as World's Best Hotel 2015". udaipurtimes.com. 13 July 2015. Archived from the original on 18 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
  2. "The Oberoi Udaivilas History". indialovely.com. 5 January 2016. Archived from the original on 18 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபராய்_உதய்விலாசு&oldid=3547158" இலிருந்து மீள்விக்கப்பட்டது