ஓபராய் டிரைடன்ட்
ஓபராய் மற்றும் டிரைடன்ட் (Oberoi Trident) இருவேறுபட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ஆகும். இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓபராய் ஹோட்டல் & ரிசர்ட்ஸ் இந்த ஹோட்டலின் உரிமையினைப் பெற்றுள்ளது. இரு ஹோட்டல்களும் ஒன்றாகவே சேர்த்து ஓபராய் டிரைடன்ட் என அழைக்கப்படுகிறது.
மும்பையிலுள்ள நரிமன் பாயிண்ட்டில் ஓபராய் ஹோட்டல் & ரிசர்ட்ஸ் மற்றும் டிரைடன்ட் ஹோட்டல் அமைந்துள்ளது. இரு ஹோட்டல்களின் மேலாண்மை மற்றும் இயக்க உரிமை ஓபராய் ஹோட்டல் & ரிசர்ட்ஸின் வசமுள்ளது. இரு ஹோட்டல்களும் தனித்தனி கட்டிடங்களாக இருந்தாலும் ஒரு பாதையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
முதலில் ஓபராய் டவர்ஸ்/ஓபராய் ஷெரடன் என அழைக்கப்பட்டது. 2004 முதல் 2008 வரை ஹில்டன் டவர்ஸ் என இயக்கப்பட்டது அதன் பின்பு ஏப்ரல் 2008 ல் ஹில்டன் ஹோட்டல் என மீண்டும் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.[1]
ஹோட்டலின் பங்குதாரர்கள்
தொகுஹோட்டலின் பெரும்பான்மையான பங்குகள் பி.ஆர்.எஸ். ஓபராயிடம் உள்ளது. இதர பங்குதாரர்களில் சிகரெட் ஹோட்டல் குழுமம் மற்றும் ஐடிசி நிறுவனம் முக்கியமானவர்கள் ஆவர். இருப்பினும் அதிக பங்குகளைக் கொண்டுள்ளதால் ஓபராய் குழுமத்திடம் உரிமையில் அதிகாரங்கள் அதிகம் உள்ளன.
நவம்பர் 2008 தீவிரவாதிகள் தாக்குதல்
தொகுநவம்பர் 26, 2008 ஓபராய் டிரைடன்ட் ஹோட்டல்கள் மும்பைத் தாக்குதலின் ஒரு பகுதியாக, தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களுடன் சேர்த்து ஹோட்டலையும் தீவிரவாதிகள் முற்றுகையிட்டனர். இந்த ஹோட்டலை தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு செய்யும் போது 350 பேர் இருந்தனர், மொத்தம் 32 பேர் கொல்லப்பட்டனர்.
ஹோட்டல்களின் பட்டியல்
தொகுஓபராய் ஹோட்டல் & ரிசர்ட்ஸ்
தொகுஇந்தியாவில்:
- ஓபராய், டெல்லி
- ஓபராய், பெங்களூர்
- ஓபராய் கிராண்ட், கொல்கத்தா
- ஓபராய் டிரைடன்ட், மும்பை
- ஓபராய் அமர்விலாஸ், ஆக்ரா
- ஓபராய் ராஜ்விலாஸ், ஜெய்பூர்
- ஓபராய் உடைவிலாஸ், உதய்பூர் (எண். 4, உலகின் சிறந்த ஹோட்டல்கள், 2012 [2])
- வைல்டு ஃபிளவர், ஷிம்லா (இமயமலை)
- ஓபராய் செசில், ஷிம்லா
- ஓபராய், மோட்டார் வெஸல் ரிந்தா, உப்பங்கழி கப்பல், கேரளா
- ஓபராய் வானயாவிலாஸ், ரன்தாம்போர் (சவாய் மதோபுர்)
- ஓபராய், குர்க்கான்
இந்தோனேசியாவில்
- ஓபராய், பாலி
- ஓபராய், லாம்போக்
மொரிஷியஸில்:
- ஓபராய், மொரிஷியஸ்
எகிப்தில்
- ஓபராய், சகி ஹஷிஸ், சிவப்பு கடல்
- ஓபராய் ஸஃரா, சொகுசு நைல் கப்பல்
- ஓபராய் பிலா, நைல் கப்பல்
சவுதி அரேபியாவில்
- ஓபராய், மடினா
அரபு எமிரேட்ஸில்
- ஓபராய், துபாய்
டிரைடன்ட் ஹோட்டல்கள்
இந்தியாவில்
- டிரைடன்ட், ஆக்ரா
- டிரைடன்ட், புவனேஷ்வர்
- டிரைடன்ட், சென்னை
- டிரைடன்ட், கோயம்புத்தூர் (கட்டிட வேலையில் உள்ளது)
- டிரைடன்ட், கொச்சி
- டிரைடன்ட், குர்க்கான்
- டிரைடன்ட், ஜெய்பூர்
- டிரைடன்ட், பந்த்ரா குர்லா, மும்பை
- டிரைடன்ட், நரிமன் பாயிண்ட், மும்பை
- டிரைடன்ட், உதய்பூர்
- டிரைடன்ட், ஹைதராபாத்
இந்தியாவிலுள்ள மற்ற ஹோட்டல்கள்
- கிளார்க்ஸ் ஹோட்டல், ஷிம்லா
- மெய்டன்ஸ் ஹோட்டல், டெல்லி
இருப்பிடம்
தொகுநரிமன் பாயிண்ட்டின் முக்கிய ஷாப்பிங்க் செய்யும் பகுதிகயில் ஓபராய் ஹோட்டல் அமைந்துள்ளது. ஹோட்டலுக்கு மிக அருகிலுள்ள பகுதிகள்,
- மரைன் டிரைவ் – சுமார் 0.5 கி.மீ
- இந்திய நுழைவு வாயில் – சுமார் 2 கி.மீ
- தாராபோர்வாலா அக்வாரியம் – சுமார் 4 கி.மீ
இந்த ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்கள் ஹாஜி அலி, ஜஹாங்கிர் கலைக்கூடம் மற்றும் சித்திவிநாயகர் கோவிலுக்கும் செல்கின்றனர். அருகிலுள்ள விமானம் மற்றும் ரயில் நிலையங்களின் தொலைவு,
- சர்வதேச விமான நிலையத்திலிருந்து தொலைவு : சுமார் 29 கி.மீ
- உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து தொலைவு : சுமார் 24 கி.மீ
- சி.எஸ்.டி ரயில் நிலையத்திலிருந்து தொலைவு : சுமார் 5 கி.மீ
- மும்பை மத்திய ரயில் நிலையத்திலிருந்து தொலைவு : சுமார் 7 கி.மீ
அறைகள் மற்றும் வசதிகள்
தொகுஓபராய் ஹோட்டலில் டீலக்ஸ் அறைகள், மதிப்புகூட்டு அறைகள், கடல் காட்சி காண்பதற்கான் சிறப்பு அறைகள், ஓபராய் எக்ஸ்கியூட்டிவ் அறைகள், ஓபராய் எக்ஸ்கியூட்டிவ் - டீலக்ஸ் அறைகள், மதிப்புகூட்டு அறைகள் மற்றும் இதர அறைகள். ஒவ்வொரு அறையும் இணையம், தொலைக்காட்சி உள்ளிட்ட பலதரப்பட்ட வசதிகளுடன் அமைந்துள்ளது. [3]
- மொத்த அறைகளின் எண்ணிக்கை: 541
- அறைத்தொகுதிகளின் எண்ணிக்கை: 107
- உணவகங்களின் எண்ணிக்கை: 4
குறிப்புகள்:
தொகு- ↑ "Hilton Mumbai to be named Trident Towers". indiatimes.com.
- ↑ World's Best Hotels 2012 Travel and Leisure
- ↑ "ஓபராய் டிரைடன்ட்". cleartrip.com.