ஓபிச்சுவரி

ஓபிச்சுவரி கவிதை அ. கி. இராமானுசன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இவர் 1929 ஆம் வருடம் மைசூரில் பிறந்தார். ஆசாரமான பிராமண வகுப்பைச் சார்ந்த இவர் நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். ‘தி ஸ்ட்ரைடர்ஸ் (1966), ‘தி ரிலேஷன்ஸ், (1971) மற்றும் ‘ஸெகண்ட் ஷைட்’ (1986) இவரது காலத்திலும் ‘தி ப்ளாக் ஹென்’ (1995) இவரது இறப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. [1][2][3]

கவிதைச் சுருக்கம் தொகு

ஓபிச்சுவரி கவிதையானது கவிஞர் தனது தந்தையை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளது. தந்தையின் இறப்புக்குப் பின்னர் கவிஞரின் குடும்ப நிலையை பற்றிக் கூறுகிறார். மேஜையின் மீது தூசிப்படிந்த தாள்கள் திரும்ப செலுத்த வேண்டிய கடன், திருமணமாகாத மகள்கள், சிறுநீரால் கட்டிலை நனைக்கும் பேரன் மற்றும் பழைய வீடு இவையே இறந்த தந்தை குடும்பத்திற்கு அளித்த சொத்தாகும். இந்திய நடுத்தரக் குடும்பத்தின் சாபக்கேடான நலையை பற்றி கவிஞர் இக்கவிதையில் எழுதியிருக்கிறார். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் மகன் செய்ய வேண்டிய கடமைகளை எடுத்துக்கூறுகிறார். தந்தையின் தகனத்திற்கு பிறகு மிஞ்சிய எழும்புத் துண்டுகளை எடுத்து மூன்று நதிகள் சங்கமிக்கும் திருவேணிசங்கமத்தில் (கங்கை, யமுனை, சரஸ்வதி, கலக்குமிடம்) மூழ்கடிக்கிறான். தனது தந்தை பலவற்றை வாழ்வில் செய்தாா் ஆனால் அவராக அதை செய்யவில்லையென்றும் தானாகவே நிகழ்ந்தது என்றும் தனது தந்தை “சிசோியன்” மூலமாக நெருக்கடியான பிராமண குடும்பத்தில் பிறந்து மாரடைப்பால் அருகிலுள்ள பழ சந்தையில் இறந்தாா் எனவும் கூறுகிறாா். இறுதியாக மாற்றப்பட்ட தனது தாயை (விதவை கோலம் பூண்ட தாயை) விட்டுச்சென்றாா் என கூறி தனது கவிதையை நிறைவு செய்கின்றாா்.

மேற்கோள்கள் தொகு

  1. அ. கி. இராமானுசன்
  2. "Obituary: A. K. Ramanujan". The Independent. 31 July 1993.
  3. Jump up to: a b c Attipat Krishnaswami Ramanujan, Biography and works Emory University.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபிச்சுவரி&oldid=3457750" இலிருந்து மீள்விக்கப்பட்டது