ஓப்பன் வெட்வேர்
ஓப்பன்வெட்வேர்(OpenWetWare) அல்லது தளையற்ற ஞானப்பொருள் என்பது " உயிரியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் தளையற்ற ஆய்வு,கல்வி,பதிப்புகள் மற்றும் விவாதத்தை வளர்க்கும்" நோக்குடன் கட்டமைக்கப்பட்டுள்ள ஓர் விக்கி யாகும்.
எம்.ஐ.டி பட்டமேற்படிப்பு மாணவர்களால் ஏப்ரல் 20,2005ஆம் ஆண்டு ஓப்பன்வெட்வேர் உருவாக்கப்பட்டது.துவக்கத்தில் எம்.ஐ.டியில் உள்ள ஆய்வுக் கூடங்களுக்கு மட்டுமே சேவை புரிய அமைக்கப்பட இத்தளம் சூன் 22,2005 முதல் அனைத்து ஆய்வகங்களுக்கும் பயன்படத் தொடங்கியது. ஏப்ரல் 16,2007 அன்றைக்கான நிலவரப்படி இத்தளத்தில் 100 ஆய்வுக் கூடங்களும்40 கல்விக் கூடங்களும்இணைந்துள்ளனர்.ஆய்வுக்கூடங்களைத் தவிர,அறிவியல் சங்கங்களும் இணைந்துள்ளன.
ஓப்பன்வெட்வேர் லினக்ஸ் வழங்கிகளில் மீடியாவிக்கி பயன்பாட்டில் இயங்குகின்றது.அனைத்து உள்ளடக்கங்களும் குனூ தளையறு ஆவண உரிமத்தின் அடிப்படையிலும் கிரியேட்டிவ் காமன்ஸ் சேர்அலைக் உரிமத்தின்கீழும் கிடைக்கின்றன.[1]
வெளியிணைப்புகள்
தொகுபதிப்புகளில் பதிந்தவை
தொகு- அறிவியல் 2.0, சயின்டிபிக் அமெரிக்கன் இதழ் ஏப்ரல், 2008.
- பகிர்கின்ற புதிய அறிவியல், பிசினஸ் வீக் மார்ச் 2, 2007.
- இணையகாலத்தில் அறிவியல்: கூட்டு முயற்சிகள் நேச்சர் திசம்பர் 1, 2005.