ஓரலகுச் சோதனை
நிரலாக்கத்தில், ஓரலகுச் சோதனை (ஒரிம அல்லது ஒரு தொகுதிச் சோதனை) என்பது ஒரு மென்பொருளின் பல கூறுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவை சரியாகத் தொழிற்படுகின்றனவா என்று உறுதி செய்யும் சோதனை நிரல் ஆகும். இதில் அலகு என்பது பயன்பாட்டு மென்பொருளில் சோதனை செய்வதற்கு தகுதிவாய்ந்த சிறிய பகுதியாகும். [1] ஒவ்வொரு முக்கிய சார்புகளுக்கும், வகுப்புகளுக்கும், அல்லது தொகுதி நிரல்களுக்கும் ஒரலகுச் சோதனையை உருவாக்கி பயன்படுத்தவேண்டும் எனப் பல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மென்பொருள் எழுதப்படும் போதும், தொகுக்கப்படும்போது, பராமரிக்கப்படும் போது என பல இடங்களில் ஓரலகுச் சோதனை பயன்படுகிறது. பொருள் சார்ந்த நிரலாக்கத்தில், அலகு என்பது பெரும்பாலும் ஒரு வர்க்கம், ஒரு முழு இடைமுகம் அல்லது ஒரு செயல்பாடாக இருக்க முடியும்..[2]
நல்ல ஓரலகுச் சோதனைகளின் பண்புகள்
தொகு- தானியக்கப்பட்டிருக்க வேண்டும்.
- மீண்டும் யாராலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
- இலகுவாக இயக்க கூடியதாக இருக்க வேண்டும்.
- வேகமாக ஓட வேண்டும்.
அலகு சோதனை கருவிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kolawa, Adam (2007). Automated Defect Prevention: Best Practices in Software Management. Wiley-IEEE Computer Society Press. p. 426. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-04212-5.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-07-23. பார்க்கப்பட்ட நாள் 2013-11-12.