ஓரிணையக் கரிமம்
ஓரிணைய கார்பன் |
---|
புரோப்பேனின் அமைப்பு (ஓரிணைய கார்பன் அணுக்கள் சிவப்பு நிறத்தால் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது) |
ஓரிணையக் கரிமம் அல்லது முதன்மைக் கரிமம் (primary carbon) என்பது ஒரே ஒரு கரிம அணுவுடன் மட்டுமே நேரடியாக இணைந்த கரிம அணுவாகும். ஆகையால், இது ஒரு கரியணுத் தொடரின் இறுதியில் இடம் பெறுகிறது. ஆல்க்கேன்களைப் பொறுத்தவரை மூன்று ஐதரசன் அணுக்கள் ஓரிணைய கார்பன் அணுவுடன் இணைந்துள்ளன. (வலது புறமுள்ள படத்தில் புரோப்பேனைப் பார்க்கவும்). ஒரு ஐதரசன் அணுவானது, ஐதராக்சில் தொகுதியால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு ஓரிணைய ஆல்ககாலை உருவாக்குகிறது. [1]
ஓரிணைய கார்பன் | ஈரிணைய கார்பன் | மூவிணைய கார்பன் | நான்கிணைய கார்பன் | |
பொதுவான அமைப்பு (R = ஆல்கைல் தொகுதி) |
||||
பகுதி அமைப்பு வாய்ப்பாடு |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hans Peter Latscha, Uli Kazmaier, Helmut Alfons Klein (2016) (in German), Organische Chemie: Chemie-Basiswissen II (7. Auflage ), Berlin: Springer Spektrum, p. 40, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-662-46180-8