ஓல்ம்கியுசுடைட்டு
ஓல்ம்கியுசுடைட்டு (Holmquistite) என்பது Li2(Mg,Fe2+)3Al2Si8O22(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இலித்தியம் மக்னீசியம் அலுமினியம் இனோசிலிக்கேட்டு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. நேர்ச்சாய்சதுரப் படிக அமைப்பில் 10 செமீ (3.9 அங்குலம்) வரை பட்டகப் படிகங்களாக அல்லது பாரிய திரட்சியாக இது படிகமாக்குகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் ஓல்ம்கியுசுடைட்டு கனிமத்தின் கடினத்தன்மை மதிப்பு 5–6 ஆகும். இதன் ஒப்படர்த்தி 2.95 முதல் 3.13 வரை ஆகவும் உள்ளது.
ஓல்ம்கியுசுடைட்டு Holmquistite | |
---|---|
வடக்கு கரோலினாவில் கிடைத்த ஓல்ம்கியுசுடைட்டு | |
பொதுவானாவை | |
வகை | இனோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | (Li2)(Mg3Al2)(Si8O22)(OH)2 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
கருப்பு, அடர் ஊதா நிறத்தில் இருந்து வெளிர் நீலம் வரை நிறத்தில் மாறுபடுகிறது.
இலித்தியம் நிறைந்த பெக்மாடைட்டு பாறைகளின் விளிம்புகளில் உருமாறிய பாறைகளின் இடப்பெயர்ச்சியால் ஓல்ம்கியுசுடைட்டு கனிமம் தோன்றுகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஓல்ம்கியுசுடைட்டு கனிமத்தை Hlm[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
இது முதன்முதலில் 1913 ஆம் ஆண்டில் சுவீடனின் சுடாக்கோமுக்கு அருகிலுள்ள உட்டோவில் கண்டுபிடிக்கப்பட்டது. சுவீடிய பாறையியல் அறிஞர் பெர் இயோகன் ஓல்ம்கியுவிசுட்டு (1866-1946) நினைவாக கனிமத்திற்கு ஓல்ம்கியுசுடைட்டு என்று பெயரிடப்பட்டது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Mindat with location data
- ↑ Webmineral data