ஓவர்ட் சின்

அமெரிக்க வரலாற்றாசிரியர், அரசியல் செயற்பாட்டாளர்

ஓவர்ட் சின் (Howard Zinn, 24 ஆகத்து 1922 — சனவரி 27, 2010) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர், வரலாற்றாசிரியர், நூலாசிரியர் பேராசிரியர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். மனித உரிமைகள் பற்றியும் போருக்கு எதிரான கருத்துக்களையும் எழுதினார்.[1]

ஓவர்ட் சின்

பிறப்பு, படிப்பு, பணிகள் தொகு

நியூயார்க்கு நகரில், யூதப் பெற்றோருக்குப் பிறந்த ஓவர்ட் சின் நியூயார்க்குப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுவர் கலைப் பட்டம் பின்னர் ஆய்வுப் பட்டமும் பெற்றார். தமது 18 ஆம் அகவையில் கப்பல் தளத்தில் பணியாளாகச் சேர்ந்து வேலை செய்தார். பின்னர் விமானப் படையிலும் பணியாற்றினார். 1956 முதல் 1963 வரை அடலாண்டாவில் ஸ்பெல்மன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஓவர்ட் சின் எழுதிய 12 நூல்களில் அமெரிக்க மக்கள் வரலாறு என்னும் நூல் இலக்கக் கணக்கில் விற்பனையாகிப் புகழ் பெற்றது. இவர் தம்மை ஒரு சனநாயக சோசலிசவாதி என்று சொல்லிக் கொண்டார். நோம் சோம்சுக்கி என்னும் மொழியியல் அறிஞர் ஓவர்ட் சின்னை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.[2]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவர்ட்_சின்&oldid=3095092" இலிருந்து மீள்விக்கப்பட்டது