ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.

இலக்கணம்

தொகு
தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்
                                   - நன்னூல்.95

எடுத்துக்காட்டு

தொகு
  • ஔவை
  • ஔவியம்
  • ஔசிதம்
  • மௌவல்
  • வௌவால்[1]

மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்துள்ள 'ஔ' தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதைக் காணலாம்.

குறிப்பு

தொகு

ஔகாரம் உயிர் எழுத்தின் வரிசையில் கடைசியாக நின்றாலும் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வரா.

உசாத்துணை

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔகாரக்_குறுக்கம்&oldid=3830065" இலிருந்து மீள்விக்கப்பட்டது