ஔவையார் (அறநூல் புலவர்)
ஆத்திச்சூடியை இயற்றியவர்
(ஔவையார், அறநூல் புலவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஔவையார் பலருள் அறநெறிப் பாடல்களைப் பாடிய ஔவையார் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்ட அறநூல்கள்
- ஆத்தி சூடி
- கொன்றை வேந்தன்
- இவை இரண்டும் நூலின் முதலில் தொடங்கும் தொடரால் பெயர் பெற்றவை
- நல்வழி
- மூதுரை
- இவை இரண்டும் நூலில் சொல்லப்படும் பொருளின் தன்மையால் பெயர் பெற்றவை.
- மூதுரை நூலை 'வாக்குண்டாம்' எனவும் வழங்குவர். இது நூலின் முதலில் தொடங்கும் தொடரால் அமைந்த பெயர்
அசதிக் கோவை என்னும் கிடைக்காத நூல் இந்த நூற்றாண்டில் இவரால் பாடப்பட்டது என்பது மு. அருணாசலம் கருத்து.
மேற்கோள்கள்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, 2005