ககன் புவிநிலை காட்டி

புவிநிலை காட்டி மிகுதிப்படுத்திய வழிநடத்துதல் (GPS-aided geo-augmented navigation) சுருக்கமாக ககன் (GAGAN) என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் வழிகாட்டி அமைப்பின் துல்லியத்தை அதிகப்படுத்துவற்காக உருவாக்கப்படும் மேம்படுத்தபட்ட அமைப்பாகும். இது புவிநிலை வழிநடத்துதல் அமைப்பில் அமெரிக்க சார்பு நிலையை குறைப்பதற்காக இந்திய அரசு மற்றும் இந்திய விமானநிலைய ஆணையத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் 3 மீட்டர்க்கு உட்பட்ட துல்லியத்தை இந்திய துணை கண்ட பகுதியில் பெறமுடியும்.

ககன் புவிநிலை காட்டி அமைப்பு
TypeRegional Satellite-based augmentation system
வடிவமைப்பாளர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
ரேதியான்
இந்திய விமான நிலைய ஆணையம்
துல்லியம்கிடைமட்டமாக 1.5-மீட்டர்,
செங்குத்தாக 2.5-மீட்டர்
ஏவப்பட்டது2011-2012
சுற்று ஆரை26,600 கிமீ (அண்.)
அதிகூடிய இயக்கக் காலம்15 ஆண்டுகள்
முழு இயங்கு நிலை2013-14[1]
திட்ட மதிப்பு774 கோடி (US$97 மில்லியன்)

மேற்கோள்கள்

தொகு
  1. Soon, safety in the sky as GPS-aided Gagan set to take off, Times of India, archived from the original on 2014-01-08, பார்க்கப்பட்ட நாள் 2013-02-17
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககன்_புவிநிலை_காட்டி&oldid=3237569" இலிருந்து மீள்விக்கப்பட்டது