ககோலி கோசு தசுதிதார்
ககோலி கோசு தசுதிதர் (Kakoli Ghosh Dastidar)(பிறப்பு: நவம்பர் 23, 1959) என்பவர் இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய மருத்துவர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் மகளிர் பிரிவான பங்கா ஜனனி பாஹினியின் தலைவராக உள்ளார். இவர் 15, 16 மற்றும் 17வது மக்களவை உறுப்பினராக இருந்தார். 2014 இந்திய பொதுத் தேர்தல் [1] மற்றும் 2019-ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இளமை
தொகுககோலி கோசு 23 நவம்பர் 1959-ல் பிறந்தார். இவரது குடும்பம் மேற்கு வங்கம் மற்றும் இந்திய அரசியல் மற்றும் அரசாங்கத்துடன் மூன்று தலைமுறைகளாகத் தொடர்பு கொண்டுள்ளது. இவரது தாய்வழி தாத்தா மேற்கு வங்காளத்தின் அஞ்சல் தலைமை அலுவலராக பணியாற்றினார். இவரது தந்தைவழி மாமா, மறைந்த அருண் மொய்த்ரா, ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் முன்னாள் பிரதேச காங்கிரசு தலைவர் ஆவார். கோசு தாய்வழி மாமா குருதாஸ் தாஸ்குப்தாவும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
கோசு தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், . மொய்த்ரா மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தின் டிக்பெரியாவில் தனது குடும்பப் பண்ணையை உருவாக்கினார். பாராளுமன்ற உறுப்பினரான கோசு தனது குடும்பத்தின் பண்ணையில் வளர்ந்தார். இவரது கணவர் சுதர்சன் கோசு தசுதிதாரும் ஒரு மருத்துவர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[2] இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[3]
கல்வி
தொகுககோலி கோசு கொல்கத்தாவில் உள்ள ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனது மருத்துவப் பட்டத்தினைப் பெற்றார். இக்கல்லூரி கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் மகப்பேறியல் மீயொலியியலில் முதுநிலைப் பயிற்சியும் பெற்றார்.[3]
தொழில்
தொகுகோசு இப்போது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உள்துறைக்கான குழுவின் உறுப்பினராக உள்ளார்.
கோசு தசுதிதார் சமூக-அரசியல் சூழலில் வளர்ந்தவர். பொது சேவையின் குடும்ப மரபைக் கொண்டிருப்பதோடு, குடிசையில் வசிக்கும் குடிமக்களுக்குச் சுகாதார சேவை வழங்குவது உட்படத் தனது சமூகத்தின் மக்களுக்குச் சேவை செய்வதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். கடத்தப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்காக தெற்கு 24 பர்கானாஸில் ஒரு பள்ளி மற்றும் மருந்தகத்தைச் செயல்படுத்தவும் கோசு உதவினார்.
2009 மக்களவைத் தேர்தலில், பராசத் (மக்களவைத் தொகுதி) தொகுதியில் 1,22,901 வாக்குகள் வித்தியாசத்தில் கோசு வெற்றி பெற்றார்.[2][4][5] முன்னதாக இவர் டயமண்ட் ஹார்பர் நாடாளுமன்றத் தொகுதி),[6] அவுரா நாடாளுமன்றத் தொகுதி[7] மற்றும் பாலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றிற்கு நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார். [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kakoli Ghosh -Political Profile". Archived from the original on 2012-03-13. பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.
- ↑ 2.0 2.1 "Kakoli Ghosh". Archived from the original on 2009-05-15. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.
- ↑ 3.0 3.1 "Biographical Sketch Member of Parliament 15th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
- ↑ "Parliament Election - 2009 West Bengal" (PDF). List Of Winners And Runners-Up With Winning Margin. Archived from the original (PDF) on 19 சூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2009.
- ↑ "Detailed Profile: Kakoli Ghosh Dastidar". பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.
- ↑ "17 - DIAMOND HARBOUR Parliamentary Constituency". Partywise Comparison Since 1977. Election Commission. Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.
- ↑ "24 – Howrah Parliamentary Constituency, West Bengal". Partywise Comparison since 1977. Election Commission of India. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-10-01.
- ↑ "152 - Ballygunge Assembly Constituency". Partywise comparison since 1977. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2007-09-17.