கக்ரபார் அணுமின் நிலையம்

குஜராத் மாநிலத்தில், சூரத் என வழங்கும் மிகப்பிரபலமான நகரத்தின் அருகாமையில் அமைந்துள்ள கக்ரபார் எனும் இடத்தில் கக்ரபார் அணுமின் நிலையம் (Kakrapar Atomic Power Station) செயல்பட்டு வருகிறது.‎[1]இந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் இந்த அணுசக்தி நிலையத்தின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறது.[2]

கக்ரபார் அணுமின் நிலையம்
கக்ரபார் அணுமின் நிலையம் is located in இந்தியா
கக்ரபார் அணுமின் நிலையம்
அமைவிடம்:கக்ரபார் அணுமின் நிலையம்
நாடுஇந்தியா
அமைவு21°14′19″N 73°21′00″E / 21.23861°N 73.35000°E / 21.23861; 73.35000
அமைப்பு துவங்கிய தேதி1984
இயங்கத் துவங்கிய தேதிமே 6, 1993
இயக்குபவர்இந்திய அணுமின் கழகம்.
உலை விவரம்
செயல்படும் உலைகள்2 × 220 MW
கட்டப்பட்டு வரும் உலைகள்2 × 700 MW
மின் உற்பத்தி விவரம்
ஆண்டு உற்பத்தி1,851 GW·h
மொத்த உற்பத்தி31,037 GW·h
இணையதளம்
Nuclear Power Corporation of India
நிலவரம்:நவம்பர் 22, 2010

கக்ரபார் அணுமின் நிலையத்தில் இரு உயர்ந்த அழுத்தத்தில் செயல்படும் தண்ணீருடன் கூடிய 220 மெகாவாட் திறன் கொண்ட உலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. இவ்வுலைகளில் கனமான நீரே மட்டுப்படுத்தியாக (moderator) பயன்படுகிறது.(கனநீர் உயர் அழுத்த அணுஉலை). ‎ [3] இவ்வாலைகளுக்கான திட்டப்பணிகள் 1984 ஆம் ஆண்டில் துவங்கின. இவ்வாலையின் முதல் உலை 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலும், இரண்டாம் உலை 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலும் மின்சாரம் தயாரித்து வழங்கத்துவங்கின. கனடா நாட்டைச் சார்ந்த காண்டு வகையிலான இவ்வுலைகள், இதுவரை மிகவும் நுட்பமாக, நல்ல பயன்திறனுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையை நிறுவுவதற்கு சுமார் ரூபாய் 13.45 பில்லியன் பணம் செலவானது.

இவ்வுலைக்கான கனநீர் தேவைகளுக்கான ஒரு கனநீர் ஆலையும் கக்ரபாரில் செயல்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. '^ 'http://www.npcil.nic.in/main/AboutUs.aspx
  2. ‎^ Plants in Operation (Company website)‎
  3. ^ "Contact Us - Nuclear Power Corporation of India Limited". Npcil.nic.in. ‎http://www.npcil.nic.in/main/contactus.aspx. Retrieved 2010-08-06.‎