கெங்கவல்லி வட்டம்
கெங்கவல்லி வட்டம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கெங்கவல்லியில் உள்ளது. கெங்கவல்லி வட்டம் 40 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[2]
இவ்வட்டத்தில் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 161,302 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 80,701 ஆண்களும், 80,601 பெண்களும் உள்ளனர். 43,838 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 58% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 71.72% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16406 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 894 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 40,899 மற்றும் 10,640 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.65%, இசுலாமியர்கள் , 3.29% கிறித்தவர்கள் 2.94% மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-14. பார்க்கப்பட்ட நாள் 2011-08-25.
- ↑ கெங்கவல்லி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ கெங்கவல்லி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்