கங்காரு: ஒரு அன்பு-வெறுப்பு கதை

கங்காரு: ஒரு அன்பு - வெறுப்பு கதை (Kangaroo: A Love-Hate Story ) என்பது ஆத்திரேலியச் சுற்றுச்சூழல் ஆவணப்படமாகும். இதை செகண்ட் நேச்சர் பிலிம்ஸ் தயாரித்தது. [1] மிக் மெக்கிண்டயர், கேட் மெக்கின்டைர் கிளெர் குழுவினரால் இணைந்து எழுதப்பட்டது. கங்காருவுடன் ஆத்திரேலியர்கள் பகிர்ந்து கொள்ளும் உறவை ஆவணப்படம் சுற்றி வருகிறது [2] இந்த ஆவணப்படத்தில் சிக்கலின் பல்வேறு பக்கங்களில் உள்ள வல்லுநர்கள் உள்ளனர். மேலும் ஆத்திரேலிய மிருகக்காட்சிசாலையின் உரிமையாளரான டிம் ஃபிளனெரி மற்றும் டெர்ரி இர்வின் ஆகியோருடன் நேர்காணல்களைக் கொண்டுள்ளது. இந்த படம் ஆத்திரேலியாவில் 5 பிப்ரவரி 2017 அன்று வெளியிடப்பட்டது, 2018 ஆம் ஆண்டில் சனவரி 19 அன்று அமெரிக்காவில் வெளியீட்டைக் கொண்டிருந்தது.

கங்காரு: ஒரு அன்பு - வெறுப்பு கதை
இயக்கம்
  • மிக் மெக்கிண்டயர்
  • கேட் மெக்கின்டைர் கிளெர்
கதை
  • மிக் மெக்கிண்டயர்
  • கேட் மெக்கின்டைர் கிளெர்
இசைடேவிட் பிரைட்
ஒளிப்பதிவுமிக் மெக்கிண்டயர்
வெளியீடுபெப்ரவரி 5, 2017 (2017-02-05)
ஓட்டம்103 நிமிடங்கள்
நாடுஆத்திரேலியா
மொழிஆங்கிலம்

பின்னணி

தொகு

மிருகத்தைப் பற்றிய வேறுபட்ட கருத்தை ஆழமாக ஆராய்வதற்கான ஆர்வமாக இந்த ஆவணப்படம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை கங்காருக்கள் சுடப்பட்டு இலாபத்திற்காக விற்கப்படுகின்றன என்பதை அறிந்து ஆச்சரியப்படுவதாக ந்டுக்கப்பட்டது என மெக்கிண்டயர் கிளியர் கூறினார். [3]

குறிப்புகள்

தொகு
  1. "Who Is Second Nature Films?". Second Nature Films (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-21.
  2. Kangaroo (2017), பார்க்கப்பட்ட நாள் 2018-08-22
  3. "screen-space - Features - KANGAROO A LOVE/HATE STORY: THE KATE MCINTYRE-CLERE INTERVIEW". screen-space.squarespace.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-29.

வெளி இணைப்புகள்

தொகு