கங்கைட்டு

ஆக்சைடு கனிமம்

கங்கைட்டு (Kangite) என்பது (Sc,Ti,Al,Zr,Mg,Ca,□)2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். அசுத்தமான இயற்கைத் தோற்ற மிகவும் அரிய இசுக்காண்டியம் ஆக்சைடு (Sc2O3) கனிமம் என இதை வகைப்படுத்துகிறார்கள். இருதொகுதி கனசதுரப் படிகத் திட்டத்தில் கங்கைட்டு படிகமாகிறது [1]. இசுக்காண்டியம் வேதியியலில் கங்கைட்டு, டிசுடரைட்டு கனிமங்கள் இரண்டும் ஒத்தவரிசை கனிமங்களாக உள்ளன. இவை இரண்டும் ஆலந்தே விண்கல்லில் கண்டறியப்பட்டவையாகும். [2][1][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mindat, Kangite, http://www.mindat.org/min-42879.html
  2. Ma, C., Tschauner, O., Beckett, J.R., Rossmann, G.R., and Liu, W., 2013: Kangite, (Sc,Ti,Al,Zr,Mg,Ca,□)2O3, a new ultra-refractory scandia mineral from the Allende meteorite: Synchrotron micro-Laue diffraction and electron backscatter diffraction. American Mineralogist 98(5-6), 870-878
  3. Mindat, Tistarite, http://www.mindat.org/min-38695.html
  4. Mindat, Yttriaite-(Y), http://www.mindat.org/min-40471.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கைட்டு&oldid=2965713" இலிருந்து மீள்விக்கப்பட்டது