கசாரேவால் (Hazarewal) (பன்மை; கசாரேவால்கள், மாற்றாக கசாரா அல்லது கசாராவால் எனவும் உச்சரிக்கப்படுகிறது.) என்பது கைபர் பக்துன்வாவின் கசாரா பகுதியைச் சேர்ந்த பல இன மக்கள் பெரும்பான்மையாக இந்த்கோ மொழி பேசும் சமூகத்த்தை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. [1] [2] இந்த்கோ பேசும் கசாரேவால்களில் சுவாதிகள், ஜாதூன்கள், கர்லால்கள், அப்பாசிகள், சையீத்கள், அவான்கள், முகலாயர்கள், தனோலிகள், துருக்கியர்கள், குரேஷிகள் மற்றும் குஜ்ஜர்கள் ஆகியோரும் அடங்குவர். கசாரா பிரிவில் அதிக எண்ணிக்கையிலான இந்த்கோ மொழி பேசுபவர்களாக பஷ்தூன்கள் இருக்கின்றனர். இந்த பஷ்தூன்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த்கோவைத் தங்கள் தாய் மொழியாகப் பேசுகிறார்கள். ஆனால் பஷ்தூ மொழியைப் கசாரேவால்களில் தாகிர்கெலிகள், சுவாதிகள், யூசுப்சாய்கள், ஜாதூன்கள், திலாசாக்கர்கள் மற்றும் தரீன்கள் ஆகியோர் அடங்குவர். [3] கசாரேவால் அல்லது இந்த்கோவான்களை, [4] பாக்கிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகள் அல்லது அண்டை நாடான ஆப்கானித்தானின் பகுதிகளில் வசிக்கும் கசாரா இன மக்களுடன் தொடர்பு படுத்தி குழப்படையக் கூடாது. கசாரேவால்கள், கடந்த சில ஆண்டுகளாக, கைபர் பக்துன்வா மாகாணத்தின் பிற பகுதிகளிலிருந்து மொழிவாரியாகப் பிரிந்து சுயாட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். [5] [6]

சான்றுகள்

தொகு
  1. IAPS funding for Dr Muhammad Shakeel Ahmad - The University of Nottingham. https://www.nottingham.ac.uk/iaps/news/2016/iaps-funding-for-dr-muhammad-shakeel-ahmad.aspx. பார்த்த நாள்: 19 June 2021. 
  2. "Four years on, the voice of Hazara 'martyrs' still resonates". The Express Tribune (in ஆங்கிலம்). 2014-04-12.
  3. Rensch, Calvin Ross; O'Leary, Clare F.; Hallberg, Calinda E. (1992). Sociolinguistic Survey of Northern Pakistan: Hindko and Gujari (in ஆங்கிலம்). National Institute of Pakistan Studies, Quaid-i-Azam University. pp. 10–11. Members of a variety of ethnic groups speak the language called Hindko. A large number of Hindko speakers in Hazara Division (Mansehra and Abbottabad Districts) are Pashtoons. Some of those speak Hindko as a second language; many others speak it as their mother tongue. These include the Tahir Kheli Pashtoons, who claim to have migrated to Hazara Division from Afghanistan during the eighteenth century. Many other mother- tongue speakers of Hindko are Swati Pathans, who are said to have formerly spoken Pashto while living in the lower Swat valley. After migrating across the Indus River into Hazara Division, which Ahmed dates around A.D. 1515, the Swatis adopted the Hindko language. There are also Pashtoons belonging to three other groups, the Yusufzai, the Jadun and the Tarin, who have replaced Pashto with Hindko. Many speakers of Hindko belong to groups other than the Pashtoons: Some of these are Saiyids, said to have come to the area in the early centuries of Islamic history, many of whom live in the Peshawar area. Large numbers of Hindko speakers are Avans, particularly in Attock District and Hazara Division. Still others belong to groups of Moughals, Bulghadris, Turks and Qureshis. In Jammun significant numbers of Gujars have adopted Hindko as their first language.
  4. Essentially representing a linguistic and cultural/regional rather than ethnic entity
  5. "In Karachi, keeping struggle for Hazara province alive" (in en). https://www.thenews.com.pk/print/34660-in-karachi-keeping-struggle-for-hazara-province-alive. 
  6. Protests erupt over Pakistan NWFP name change
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசாரேவால்&oldid=3776515" இலிருந்து மீள்விக்கப்பட்டது