கசுடா சியம்ப்ரே, கொமண்டெடே


கசுடா சியம்ப்ரே, கொமண்டெடே அல்லது கசுடா சியம்ப்ரே (ஹஸ்டா சியம்ப்ரே, எசுப்பானியம்: Hasta Siempre, Comandante), என்பது 1965ல் கூப இசையமைப்பாளர் கார்லோசு பவுலோவினால் எழுதப்பட்ட எசுப்பானிய பாடல் ஆகும். காங்கோவில் புரட்சியை ஏற்படுத்தும் முயற்சியில் கூபாவை விட்டு சேகுவேரா வேளியேறியபோது, அவர் விட்டுச் சென்ற கடிதத்திற்கு பதில் கொடுக்கும் வன்னம் இதன் பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூப புரட்சியில் சேகுவேராவின் பங்கையும், அவரது வீரத்தையும் இந்த பாடல் நினைவுகூறுகின்றது. பாடலின் தலைப்பு அவரின் புகழ் பெற்ற வாக்கியமான "¡Hasta la Victoria Siempre!" என்பதில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

சேவின் மறைவுக்கு பிறகு, இந்த பாடல் மிகவும் புகழ் பெற்றது. சேகுவேராவின் இசை அடையாளமாகவே மாறிய இந்த பாடல் இதுவரை 200க்கும் மேலான கலைஞர்களால் மீளாக்கம் செய்யப்பட்டுள்ளது[1].

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு