கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்

கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். காஞ்சியில் பிறந்து அதன் அருகில் உள்ள கச்சிப்பேடு என்னும் ஊர்ப்பகுதியில் வாழ்ந்தவர் இவர்.[1] குறுந்தொகை நூலில் 213, 216 எண்ணுள்ள இரண்டு பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

குறுந்தொகை 213 தரும் செய்தி

தொகு

கலைமான் பாலை நிலத்தில் தனக்கு உணவு கிடைக்காமையால் காலால் பறித்துத்தரல் என்னும் கிழங்குகளைத் தன் குட்டிக்கு ஊண்டித் தானும் உண்ணும். தெறித்துத் துள்ளி விளையாடும் தன் குட்டிக்கு நிழல் இல்லாமையால், தான் போய்க் குட்டியின் பக்கத்தில் நின்று அதற்கு நிழல் தரும்.

  • நசை = ஈரம், இரக்க குணம்

பொருள் தேடச் சென்ற நம் தலைவர் நசை உள்ளவர். ( இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நம் நினைவு வந்து விரைவில் திரும்பிவிடுவார்.)

குறுந்தொகை 216 தரும் செய்தி

தொகு
  • வாடா வள்ளி = கற்றாழை
  • பாடமை சேர்க்கை = படிவு படிவுகளாக அமைக்கப்பட்ட மெத்தை
  • தோடார் எல்வளை = புயத்தோளில் தொடுக்கப்படும் ஒளி வளையல்

அவர் வாடா வள்ளி உள்ள பாலைநிலக் காட்டில் செல்கிறார். நான் தோடார் எல்வளை நெகிழப் பாடமை சேக்கையில் தூங்காமல் துன்புற்றுக் கிடக்கிறேன். இதனை எண்ணிப் பார்க்காமல் அவர் திரும்புவேன் என்று சொன்ன பருவ மழை இங்குப் பெய்கிறது. இன்னும் பெய்ய மின்னுகிறது. (என்ன செய்வேன்) - தலைவி தோழியிடம் இவ்வாறு சொல்கிறாள்.

மேற்கோள்கள்

தொகு
  1. கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 3-4.