கடம்பின் பெருவாயில்

கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்ட குடியினர் கடம்பர். கடம்பின் பெருவாயில் அவர்களது ஊர்.

நன்னன் என்பான் ஒருவனும் அவனது முன்னோரும் கடம்பின்-பெருவாயில் நாட்டை ஆண்டுவந்தனர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை நூலைப் பாடிய பெருவாயில் முள்ளியார் இந்த பெருவாயில் நகரில் வாழ்ந்த புலவர்.

பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்துத் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இந்தக் கடம்பரை வென்றான். பலர் கூடிக் காப்பாற்றிய அவர்களது கடம்ப மரத்தை வெட்டி அந்த மரத்தில் தனது அரச-முரசைச் செய்துகொண்டான். [1] [2] [3] [4] [5] [6]

லட்சத்தீவு பகுதில் வாழ்ந்துகொண்டு அரபிக்கடல் வழியே செல்லும் கப்பல்களைக் கொள்ளையடித்து வந்தவர் கடம்பர் என்பது அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியின் கருத்து. சான்றுகள் வேறு வகையில் கருதுமாறு அமைந்துள்ளன.

சான்று தொகு

  1. பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய், வென்று எறி முழங்குபணை செய்தான் - பதிற்றுப் பத்து 11-12
  2. கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே பதிற்றுப்பத்து 12-3
  3. கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பணை 17-5
  4. கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பு 20-4 (முன்பு = வலிமை)
  5. நாலாம்பத்துத் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் கடம்பின் பெருவாயில் நன்னனை ஒடுக்கினான். \ உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை நிஅலைச் செருவின் ஆற்றலை அழித்தான் - பதிகம் 4-7
  6. ஒன்பதாம் பத்தின் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறை கடம்புமுதல் தடிந்த முன்னோரின் வழிவந்தவன். பதிற்றுப்பத்து - 88-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடம்பின்_பெருவாயில்&oldid=2565073" இலிருந்து மீள்விக்கப்பட்டது