கடம் திட்டம்
கடம் திட்டம் என்பது கோதாவரியின் கிளை நதியான கடம் ஆற்றின் குறுக்கே உள்ள ஒரு பெரிய நீர் தேக்கமாகும். இது தெலங்காணா மாநிலத்தில் அதிலாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் சுமார் 700 அடி வரை நீரை தேக்கி வைக்கமுடியும். இதன் முழு கொள்ளளவு 7.6 டிஎம்சி ஆகும். இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள 18 மதகுகள் மூலம் வெள்ளக் காலங்களில் அதிகபட்சமாக மூன்று லட்சம் கன அடி நீரை வெளியேற்ற முடியும். [1]