கடற்சளி
கடற்சளி அல்லது கடலெச்சில் என்று அறியப்படுவது உலகம் முழுவதும் உள்ள பெருங்கடல்களில் குறிப்பாக நடுநிலக் கடலில் காணப்படும் அடர்த்தியான மற்றும் வழவழப்பான ஒரு உயிரினமாகும்.[1]
கலவை
தொகுகடற்சளியானது எண்ணிலடங்கா நுண்ணுயிரிகளால் ஆனது. கடற்பரப்பில் பாசுபரசு அதிகரிப்பதாலும் உலக வெப்பமயமாதலினாலும் வறட்சியினாலும் இது உருவாவதாய் கருதப்படுகிறது.[2]
தாக்கம்
தொகுகடற்சளியானது கடல்வெப்பமயமாதலை அதிகரிக்கின்றது. கடல் வாழ் உயிரினங்களின் செவுள்களில் அடைபட்டு அவை சுவாசிப்பதை தடுக்கிறது. தீநுண்மிகள் பரவிட வித்திடுகிறது.[3]
மனிதர்களுக்கு கடற்சளியை உட்கொள்வதால் எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் சுற்றுச்சூழல் மற்றும் மீன்வளத்தை பாதிக்கின்றது. கடற்சளி உள்ள நீர் துர்நாற்றம் வீசும் என்பதால் அது குளிப்பதற்கு உகந்தது அல்ல. இதனால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படுகிறது.[4]
நடவடிக்கைகள்
தொகுபருவநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வருதல், கழிவுநீர் மேலாண்மை மற்றும் கடற்சளியை சேகரித்து அகற்றுதல் ஆகியவை கடற்சளிகளின் குழுமத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகும்.[5]