கடலூர் அஞ்சலையம்மாள்

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை

கடலூர் அஞ்சலையம்மாள் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை. இவர் 1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியப் போதே, அஞ்சலையம்மாளும் தமது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல்போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_அஞ்சலையம்மாள்&oldid=4164222" இலிருந்து மீள்விக்கப்பட்டது