கடல்சார் பட்டுப் பாதை அருங்காட்சியகம்

கடல்சார் பட்டுப் பாதை அருங்காட்சியகம் ( Maritime Silk Route Museum) என்பது சீனாவின் குவாங்டொங் மாகாணத்தின், யாங்சியாங்கிலுள்ள, ஐலிங் தீவில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும். அருங்காட்சியகத்தின் பணிகள் 2004 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது.[1] இந்த அருங்காட்சியகம் 2009 டிசம்பர் 24 ஆம் தேதி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. . [2]

கடல்சார் பட்டுப் பாதை அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகம் 300,000 கலைப்பொருட்கள் மற்றும் நீர் தொட்டிகளில் உடைந்த கப்பல்களின் துண்டுகளை வைக்க தேவையான வசதிகளுடன் கட்டப்பட்டது. முக்கிய கண்காட்சி நன்காய் 1 கப்பல் விபத்து ஆகும். இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐலிங் தீவில் மூழ்கிய ஒரு மரக் கப்பல் ஆகும். [3] நன்காய் 1 படிக மாதிரியாக தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இது அருங்காட்சியகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. இது ஆசியாவிலேயே நீருக்கடியில் காட்சிப்படுத்துவதற்கான இந்த வசதிகளைக் கொண்ட ஒரே அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தில் சிதைவிலிருந்து 200 கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "CHINA MARITIME SILK ROAD MUSEUM". The Australian National University.
  2. "广东海上丝绸之路博物馆开馆观赏亮点多". Xinhua. Archived from the original on January 29, 2010.
  3. "The Guangdong Maritime Silk Road Museum (Nanhai No. 1 Museum), Yangjiang, Guangdong Province, China". UNESCO.
  4. "Guangdong Marine Silk Road Museum Opens". Confucius Institute. Archived from the original on 2011-07-07.

வெளி இணைப்புகள்

தொகு