கடல்வழி வணிகம் (நூல்)

கடல்வழி வணிகம் என்பது, கடல்வழி வணிகம் பற்றிப் பொதுவாகவும், தமிழ்நாட்டினதும் இந்தியாவினதும் கடல்வழி வணிகம் பற்றிச் சிறப்பாகவும் எடுத்துக்கூறும் ஒரு நூலாகும். பதினான்கு ஆண்டுகள் இந்தியக் கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றிய நரசய்யா இந்த நூலை எழுதியுள்ளார். இதன் முதற் பதிப்பைப் பழனியப்பா பிரதர்ஸ் என்னும் பதிப்பகம் 2005 ஆம் ஆண்டு வெளியிட்டது.

கடல்வழி வணிகம்
நூல் பெயர்:கடல்வழி வணிகம்
ஆசிரியர்(கள்):நரசய்யா
வகை:வரலாறு
துறை:கடல்வழி வணிக வரலாறு
காலம்:பழைய காலத்தில் இருந்து தற்காலம் வரை
இடம்:இந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:395
பதிப்பகர்:பழனியப்பா பிரதர்ஸ்
பதிப்பு:2005

நோக்கம்

தொகு

கடல் வணிகத்தைக் குறித்துப் பல ஆய்வாளர்கள் எழுதிய சிறந்த நூல்களிலிருந்து முக்கியமான பகுதிகளைத் தொகுத்து எளிமையான முறையில் சாதாரண மக்களும் படிப்பதற்குத் தக்கவாறு தமிழில் தருவதே தனது நோக்கம் என்று நூலாசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.[1]

உள்ளடக்கம்

தொகு

இந்த நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல்பாகத்தில் பண்டைக்காலம், இடைக்காலம், மேல் நாட்டவர் ஆட்சிக் காலங்களில் இந்தியாவின் கடல்வழி வணிகத்தின் நிலை எடுத்தாளப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் கடல்வழி வணிகத்தின் இன்றைய நிலை பற்றிப் பேசப்படுகிறது. முதல் பாகத்தில் பின்வரும் ஒன்பது அத்தியாயங்கள் உள்ளன.[2]

  1. இந்தியத் தீபகற்பம்
  2. பழங்கால, இடைக்காலக் கடல்வழி வாணிகம்
  3. நாணய வழிச் சான்றுகள்
  4. வணிகக் குழுக்களும் வணிகப் பெருமக்களும்.
  5. இந்தியக் கப்பற்கலையும் கப்பற்கூடங்களும்
  6. மேலைநாட்டினரின் இந்திய வருகை
  7. கிழக்கிந்தியக் கம்பனியின் ஊடுருவலும் ஆங்கில ஏகாதிபத்தியமும்
  8. நசுக்கப்பட்ட இந்தியக் கடல் வாணிகம்
  9. சிந்தியாவின் சிறப்பும் இந்தியாவின் விழிப்புணர்ச்சியும்

இரண்டாம் பாகம் பின்வரும் 15 அத்தியாயங்களை உள்ளடக்கியது.[3] இவற்றில் முதல் அத்தியாயம் இந்தியத் துறைமுகங்களின் தோற்றம் வளர்ச்சி என்பவற்றைப் பொதுவாகக் எடுத்தாளுகின்றது. தொடர்ந்துவரும் 12 அத்தியாயங்கள் குறிப்பிட்ட துறைமுகங்களைத் தனித்தனியாகவும் 14 ஆவது அத்தியாயம் மாநிலத் துறைமுகங்கள் பற்றிப் பொதுவாகவும் எடுத்தாளுகின்றது. கடைசி அத்தியாயம் இந்தியக் கடற்படையைப் பற்றியது.

  1. இந்தியாவின் இன்றைய துறைமுகங்கள்: தோற்றமும் வளர்ச்சியும்
  2. கல்கத்தா துறைமுகம்
  3. பம்பாய்த் துறைமுகம்
  4. நவஷேவா துறைமுகம்
  5. சென்னைத் துறைமுகம்
  6. எண்ணூர்த் துறைமுகம்
  7. கொச்சித் துறைமுகம்
  8. விசாகப்பட்டினத் துறைமுகம்
  9. மார்முகோவாத் துறைமுகம்
  10. கண்ட்லா துறைமுகம்
  11. புது மங்களூர்த் துறைமுகம்
  12. தூத்துக்குடித் துறைமுகம்
  13. பரதீப் துறைமுகம்
  14. மாநிலத் துறைமுகங்கள்
  15. இந்தியக் கப்பற்படை

குறிப்புகள்

தொகு
  1. நரசய்யா, 2005. பக். 14.
  2. நரசய்யா, 2005. பக். 20.
  3. நரசய்யா, 2005. பக். 264.

உசாத்துணைகள்

தொகு
  • நரசய்யா, கடல்வழி வணிகம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்வழி_வணிகம்_(நூல்)&oldid=3278870" இலிருந்து மீள்விக்கப்பட்டது