கடல் தொழில்நுட்பம்

கடல் தொழில்நுட்பக்கழகம் (Marine Technology Society) ஒரு கடல்சார் தொழில்நுட்பக் கழகமாகும். இதில் உலகின் பல நாடுகளில் இருந்து 3,800 கடற் பொறியாளர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கல்வியாளர்களும் சேர்ந்துள்ளனர். இக்கழகம் 1963 இல் நிறுவப்பட்டது. இதன் இலக்கு கடல் தொழில்நுட்பப் பயன்பாட்டில் விழிப்புணர்வும் புரிதலும் முன்னேற்றமும் வளர்த்தெடுப்பதாகும்.[1] இக்கழகம், ஐக்கிய அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டம், வாசிங்டனில் அமைந்துள்ளது. முன்னாள் செயல் இயக்குநராக மார்ட்டின் பின்னெட்டி, யூடித் கிரவுதமர், இரச்சர்டு இலாசன் ஆகியோர் இருந்துள்ளனர். இக்கழகத்தில் 29 தொழிநுட்பப் புலங்களும் 17 பிரிவுகளும், யப்பான், கொரியா, நார்வே உட்பட உள்ளன. மேலும் இதில் 23 மாணவர் பிரிவுகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அமைந்துள்ளன.

கடல் தொழில் நுட்பம்

இதன் முதன்மையான வெளியீடு கடல் தொழிநுட்ப இதழாகும். இந்த இதழ் ஆண்டுக்கு ஆறு முறை வெளியிடப்படுகிறது. வழக்கமாக இது கருப்பொருள் சார்ந்து அழைத்துப் பெறும் ஆய்வுத் தாள்களையே வெளியிடுகிறது. அண்மையில் இது 0.763 பன்னாட்டுச் செந்தர நிறுவனத் தாக்கக் காரணியைப் பெற்றுள்ளது.

இக்கழகம் பின்வரும் குறிப்பிடத்தக்க பல கருத்தரங்குகளை நடத்தியுள்ளது:

  • கடலியல் கருத்தரங்கம்( இணைப் புரவலாண்மை பன்னாட்டு மின், மின்னன் பொறியியல் கழகம்(IEEE)/கடற்பொறியியல் பிரிவு),
  • கடலடி செயலாக்கம் (இணைப் புரவலாண்மை ADCI),
  • இயங்கியல் இடங்காட்டல் கருத்தரங்கம்,
  • ஆண்டிருமுறை மிதவைப் பட்டறை (இணைப் புரவலாண்மை நாவாய் ஆராய்ச்சி அலுவலகம்),
  • நுட்பவலை (TechSurge) எனும் நடப்புத் தலைப்புகளில் பட்டறை.

இதன் ஆண்டுக் கருத்தரங்கம் 1969 இல் மியாமிக் கடற்கரையில் நிகழ்ந்தது.[2] இக்கருத்தரங்கில் அப்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் சுப்பிரோ அகுநியூ தலைமையுரை ஆற்றினார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Home Page".
  2. "Sea Group Picks Beach For Parley". The Miami News. October 10, 1967. https://news.google.com/newspapers?id=LDs0AAAAIBAJ&pg=3890,1679949&dq=marine-technology-society&hl=en. பார்த்த நாள்: 8 February 2010. 
  3. "Agnew Asserts Budget Will Bar 'Full Speed' on Ocean Research". The New York Times: pp. 18. June 17, 1969. https://www.nytimes.com/1969/06/17/archives/agnew-asserts-budget-will-bar-full-speed-on-ocean-research.html. பார்த்த நாள்: 8 February 2010. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_தொழில்நுட்பம்&oldid=3727639" இலிருந்து மீள்விக்கப்பட்டது