ஆத்திகம்
(கடவுட் கொள்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆத்திகம், கடவுட் கொள்கை அல்லது இறைவாதம் (Theism) என்பது குறைந்தது ஒரு கடவுள் இருக்கிறார் என நம்புவது ஆகும். குறிப்பாக, ஆத்திகம் என்பது ஒரே கடவுளின் பண்புகளையும் அண்டத்துடன் அவருக்குள்ள தொடர்புகள் குறித்ததுமான ஒரு கருதுகோள் ஆகும். இக்கருதுகோளின்படி ஆத்திகம் கடவுளைத் தனிநபராகக் காண்பதுடன், அவர் பிரபஞ்சத்தின்பல் வேறு செயல்பாடுகளிலும் ஆளுமையிலும் பங்கேற்பதாகவும் கொள்கிறது. கிறித்துவம், யூதம், இசுலாம் மற்றும் இந்து சமயத்தின் சில வடிவங்களில் மரபுவழியே கொள்ளப்படும் கடவுளை ஆத்திகம் விவரிக்கிறது. பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சிகளின் அடிப்படையில் உருவான கடவுளற்ற இயற்கை நம்பிக்கைக் கருதுகோளுடன் வேற்றுமைப்படுத்தவே இச்சொல்லின் பயன்பாடு எழுந்தது.[1]