கடுக்கரை தமிழ் நாட்டின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய அழகிய கிராமம் ஆகும். சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு நடுவில் ஒரு சிறிய குன்றின் கீழ் அமைந்துள்ளது.நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து, 15 கி.மீ., தொலைவில் இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது.

பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் தம்பிரான் கோவில் ஊட்டு திருவிழா இவ்வூரில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். இவ்வூரின் முக்கிய தொழிலாக விவசாயமும் வைக்கோல் கட்டும் தொழிலும் உள்ளது நெல், வாழை, உளுந்து, தென்னை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவை இங்கு பயிரிடப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் (காட்டுப்புதூர்) அமைந்துள்ள நீர் வீழ்ச்சி உலக்கை அருவி ஆகும். இந் நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். மேலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும் மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன. இந்நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. எனவே உலக்கை அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிற்சியையும் செய்வது போலவும் ஆகும். கடுக்கரை பகுதியில் விளையும் நேந்திரம் பழம் உலகத் தரம் வாய்ந்தது ஆகும்..இது ஏத்தன்பழம் என்று இங்கு கூறப்படுகிறது

ஊரின் நுழைவாயிலில் முத்தாரம்மனும், வடக்கு பாகத்தில் செல்லியம்மனும் அருள்பாலிக்கிறார்கள்

ஊட்டு திருவிழா

தொகு

கேரள தேசத்து தம்பிராஜா கிட்டே, 'அப்பாவுக்கு பிறகு நீங்க தான் நாடாள்வீங்க'ன்னு ஜோசியக்காரர்கள் சொல்ல, 'அண்ணனுக்கு இல்லாத பதவி, எனக்கு வேண்டாம்'னு, நாட்டை விட்டுட்டு அந்த ராஜா கிளம்பிட்டார். எல்லாத்தையும் துறந்து மலைகள்ல வாழ்ந்தவர், கடைசியா இந்த ஊருல தான் ஜீவ சமாதியானார். அவரோட நினைவா ஒரு கோவில் கட்டுன இந்த ஊர் மக்கள், 12 கோட்டை அரிசி பொங்கி அவருக்கு படைச்சிருக்காங்க. நாடு துறந்த அந்த மகாராஜாவுக்கு எங்க முன்னோர்கள் செஞ்ச அந்த மரியாதையை, இன்னைக்கும் விடாம தொடர்ந்துட்டு வருகிறது, - 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.

வசதிகள்

தொகு
  • கனரா வங்கி -
    • 1/107, முத்துநகர் ,கடுக்கரை, தோவாளை தாலுகா, கன்னியாகுமரி மாவட்டம், கடுக்கரை தமிழ்நாடு 629851
    • IFSC Code - CNRB0004868
    • MICR Code - 629015013
    • Phone - +91 80221 31438
  • அரசு உயர்நிலை மற்றும் தொடக்க பள்ளி
  • தபால் அலுவலகம் (629-851)
  • ரேஷன் கடை


http://wikimapia.org/street/15592185/Kadukkarai

https://www.instagram.com/kadukkarai.kk/

http://wikiedit.org/India/Kadukkarai/227722/

https://ifsc.bankifsccode.com/CNRB0004868

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுக்கரை&oldid=3725042" இலிருந்து மீள்விக்கப்பட்டது