கடுக்காமுனை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கடுக்காமுனை ஒரு கிராமத்தின் பெயர். இந்த கிராமமானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் மேற்கு, படுவான்கரை பிரதேசத்தில் அமைந்துள்ளது.[1]
இந்த கிராமத்தில் முற்றிலும் தமிழர்களே வாழ்கின்றனர். இங்கு மூன்று சைவ ஆலயங்களும், ஒரு பாடசாலையும் (கடுக்காமுனை வாணி வித்தியாலயம்) அமைந்துள்ளது.
இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தின் மூலமே வாழ்வாதாரம் ஈட்டுகின்றனர். கடுக்காமுனையில் வில்லுக்குளம் அமைந்திருப்பதால் இங்குள்ள விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான நீர் இந்த குளத்தில் இருந்து கிடைக்கிறது. வில்லுக்குளத்து நீர் கடுக்காமுனைக்கு மட்டுமின்றி, அதனை சுற்றிலும் உள்ள ஏனைய கிராமத்து விவசாயிகளுக்கும் உகந்ததாக உள்ளது. கடுக்காமுனை வில்லுக்குளத்து நீரில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சிறுபோகம் (காலபோகம்) விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டதில் உள்ள பெரிய குளங்களில் கடுக்காமுனை வில்லுக்குளமும் ஒன்று. இந்த குளத்தில் தேக்கி வைக்கப்படும் நீர் விவசாயத்துக்கு மட்டுமின்றி, மக்களின் அன்றாட தேவைகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
கடுக்காமுனை வரலாறு
தொகுகடுக்காமுனை என்று பெயர் வந்ததற்கு காரணம். முன்னை காலங்களில் இங்கு கடுக்காய் மரங்கள் அதிகமாக இருந்தால் இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகின்றது. ஆனால் இன்றளவு இங்கு கடுக்காய் மரங்களை பார்க்க முடியாது. மக்கள் இங்கு குடியேறிய காலங்களில் காடுகளை அழித்து நிலங்கள் பிடித்தன, அதனால் இந்த மரங்கள் முற்றாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழீழத்தில் உள்ள மாவட்டங்களில் ஓர் மாவட்டம் மட்டக்களப்பு அதன் ஊர்களின் பெயர்களும். இதற்கு இன்னொரு சிறப்பம்சம் உண்டு மீன் பாடுமாம் தேன் நாடு" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.